கதைப்பூஞ்சைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
கதைப்பூஞ்சைத் தொகுதி (Basidiomycota) (/bəˌsɪdioʊmaɪˈkoʊtə/)[2] அல்லது சுத்தியல் பூஞ்சைத் தொகுதி என்பது பூஞ்சைத் திணையில் "உயர்பூஞ்சை"த் துணைத்திணையில் உள்ள இரு பூஞ்சைத் தொகுதிகளில் ஒன்றாகும். மற்றொன்று பைப்பூஞ்சைத் தொகுதி ஆகும். இதன் உறுப்பினர்கள் கதைப்பூஞ்சைகள் அல்லது பேசிடியோமைசீட்டுகள் எனப்படுகின்றன.
Basidiomycota | |
---|---|
Basidiomycetes from Ernst Haeckel's 1904 Kunstformen der Natur | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | பூஞ்சை |
Subkingdom: | டிக்கார்யா |
தொகுதி: | பாசிடியோமைகோட்டா Moore, R.T. 1980[1] |
Subdivisions/Classes | |
|
கதைப்பூஞ்சைத் தொகுதி மிகக் குறிப்பாக பின்வரும் குழுக்களை உள்ளடக்குகிறது: காளான்கள், பந்துப் பூஞ்சைகள், ஒட்டுகொம்புக் காளான், அடைப்புக்குறி பூஞ்சை,பிற பலபுரையிகள், குழைவுப் பூஞ்சை, வெண்குடையிகள், சாந்திரெல்லெகள், மண் உடுக்கள், தூசுப் பூஞ்சை, ஒட்டுத் தூசுப் பூஞ்சை, துருப்பூஞ்சை, கண்ணாடி நொதிப் பூஞ்சை, மாந்த நோயீனி நொதியாகிய கிரிப்டோகாக்கசு.
கதைப்புஞ்சைத் தொகுதி இழையாலான படலப் பூஞ்சைகளாகும் ( நொதிப் பூஞ்சை மட்டும் விதிவிலக்கு). இது சிறப்பு கதைவடிவ (சுத்தியல் வடிவ) முனைக்கலத்தை (இது கதைக்கலம் எனப்படும்) உருவாக்கி இனப்பெருக்கத்தைச் செய்கிறது. இந்த கதைக்கலம் வழக்கமாக நான்கு குன்றல்பிளவு விதைத்தூள்களைப் பெற்றிருக்கும் . இந்தச் சிறப்பு விதைத்தூள்கள் கதை விதைத்தூள்கள் எனப்படுகின்றன.[3] என்றாலும் சில கதைப்பூஞ்சைகள் பாலினமற்ற இனப்பெருக்கத்தை நிகழ்த்துகின்றன. பாலினமற்ற முறையில் இனப்பெருக்கம் செய்யும் கதைப்பூஞ்சைகளும் பிற கதைப்பூஞ்சைகளோடு முற்றொருமித்தவைகளாக அமைவதாலும் அவற்றைப் போன்ற உடற்கூற்றியல் தன்மைகலப் பெற்றிருப்பதாலும் ஒரே தொகுதியில் அடங்குகின்றன. இந்த இருவகைகளும் முற்றொருமித்த கலச்சுவர் உறுப்புகளையும் கொக்கியிணைவையும் தொகுதி மரபாய்வுத் தரவுகளையும் பெற்றமைகின்றன.