தைவானின் புவியியல்
From Wikipedia, the free encyclopedia
தைவான் அல்லது தாய்வான் (Taiwan, (தாய்வானிய மொழி: Tâi-oân) கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவாகும். "தாய்வான்" என்பது சீனக் குடியரசு நிர்வகிக்கும் பகுதிகளையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கமாகும். தீவுக் கூட்டங்களான தைவான் மற்றும் பெங்கு (Penghu) (தாய்பெய், காவோசியுங் மாநகராட்சிகள் தவிர்த்து) ஆகியன சீனக் குடியரசின் தாய்வான் மாகாணம் என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது.
தைவான் Taiwan | |
---|---|
பகுதி | கிழக்காசியா |
பரப்பளவு | தரவரிசை 139[1] |
• மொத்தம் | 35,980 km2 (13,890 sq mi) |
• நிலம் | 89.7% |
• நீர் | 10.3% |
கரையோரம் | 1,566.3 km (973.3 mi) |
அதியுயர் புள்ளி | யூ சான், 3,952 m (12,966 அடி) |
காலநிலை | வெப்பமண்டல கடல் காலநிலை[1] |
இயற்கை வளங்கள் | நிலக்கரி, இயற்கை எரிவளி, சுண்ணக்கல், பளிங்கு, கல்நார், விவசாய நிலம்[1] |
சூழல் பிரச்சனைகள் | தொழில்துறை உமிழ்வுகளிலிருந்து வளி மாசடைதல்; நீர் மாசுபடுதல், கழிவு நீர்; குடி நீர்; ஆபத்தான உயிரினங்களின் வணிகம்; குறைந்த அளவிலான கதிரியக்கக் கழிவகற்றல்[1] |
தாய்வான் தீவு, கிழக்காசியாவில் சீனாவின் தென்கிழக்கே, ஜப்பானின் முக்கிய தீஇவுகளுக்கு தென்மேற்கே, பிலிப்பீன்சுக்கு வட-வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. தாய்வான் போர்மோசா (Formosa) எனவும் அழைக்கப்படுறது. போர்மோசா என்பது போர்த்துகீச மொழியில் "அழகான (தீவு)" எனப் பொருள்படும். இது பசிபிக் கடலின் கிழக்கே, தென் சீனக் கடல் மற்றும் லூசோன் நீரிணை ஆகியவற்றுக்குத் தெற்கே, தாய்வான் நீரிணைக்கு மேற்கே, கிழக்கு சீனக் கடலுக்கு வடக்கேஎயும் அமைந்துள்ளது. இத்தீவு 394 கிமீ நீளமும் 144 கிமீ அகலமும் கொண்டது.