பாரெசுட்டு இரே மவுள்டன்
12 ஆம் நுற்றாண்டு அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
பாரெசுட்டு இரே மவுள்டன் (Forest Ray Moulton) (ஏப்பிரல் 29, 1872 - திசம்பர் 7, 1952)ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் பாரெசுட்டு இரே மவுள்டன்Forest Ray Moulton, பிறப்பு ...
பாரெசுட்டு இரே மவுள்டன் Forest Ray Moulton | |
---|---|
1947, அமெரிக்க அறிவியல் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் | |
பிறப்பு | ஏப்பிரல் 29, 1872 இலே இராய், மிச்சிகன் |
இறப்பு | 7 திசம்பர் 1952(1952-12-07) (அகவை 80) வில்மெட்டே, இல்லினாயிசு] |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | சிகாகோ பல்கலைக்கழகம் |
மூடு
இவர் மிச்சிகனில் உள்ள இலெ இராயில் பிறந்தார். இவர் ஆல்பியோன் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1894 இல் கலையியல் இளவல் பட்டம் பெற்றதும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பில் சேர்ந்தார். இவர் 1899 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அங்கே இவர் 1898 முதல் 1900 வரை வானியல் உதவியராகவும் 1900 முதல் 1903 வரை பயிற்றுநராகவும் 1903 முதல் 1908 வரை உதவிப் பேராசிரியராகவும் 1908 முதல் 1912 வரை இணைப் பேராசிரியராகவும் இருந்து 1912 முதல் பேராசிரியரானார்.[2]