பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா
From Wikipedia, the free encyclopedia
பேர்வேக்சு கவுண்டி என்பது வர்சீனியா மாநிலத்தில் உள்ளது. வடக்கு வர்சீனியாவில் உள்ள இதன் எல்லையில் அலெக்சாண்டிரியா நகரமும் ஆர்லிங்டன் கவுண்டியும் உள்ளன. இவை வாசிங்டன் டிசியின் புறநகர் பகுதிகளாக உள்ளன. பொதுவாக புறநகர் அமைப்பை கொண்டுள்ள இக்கவுண்டியில் பல நகர்புறங்களும் புறநகரங்களும் உள்ளன.
பேர்வேக்சு கவுண்டி, வர்ஜீனியா | |||||
---|---|---|---|---|---|
County | |||||
County of Fairfax | |||||
மவுண்ட் வெர்னான் இல்லம் | |||||
| |||||
வர்ஜீனியா மாகாணத்தின் அமைவிடம் | |||||
ஐக்கிய அமெரிக்காவில் வர்ஜீனியா மாகாணத்தின் அமைவிடம் | |||||
உருவாக்கப்பட்ட நாள் | யூன் 19, 1742 | ||||
named for | தாமசு பேர்வேக்சு, கேமரூன் பேர்பாக்சின் 6-வது பிரபு | ||||
இருக்கை | பேர்வேக்சு சட்டப்படி கவுண்டியை சேர்ந்தது அல்ல 1 | ||||
பெரிய town | Herndon | ||||
பரப்பளவு | |||||
• மொத்தம் | 406 sq mi (1,052 km2) | ||||
• நிலப்பரப்பு | 391 sq mi (1,013 km2) | ||||
• நீர்ப்பரப்பு | 15 sq mi (39 km2), 3.8 | ||||
காங்கிரஸின் மாவட்டங்கள்s | 8th, 10th, 11th | ||||
Time zone | Eastern: UTC-5/-4 | ||||
இணையத்தளம் | www | ||||
Footnotes: 1 Administrative and court offices are located in unincorporated areas in Fairfax County |
2010ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டின் படி இதன் மக்கள் தொகை 1,081,726 ஆகும். [1] 2019இல் மக்கள் தொகை 1,147,532 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது, [2]வர்சீனியாவின் மக்கள் தொகையில் 13% மக்கள் இங்கு வசிக்கின்றனர், மக்கள் தொகை அடிப்படையில் இதுவே வர்சீனியாவின் பெரிய நிர்வாக அலகாகும். அதுபோலவை பெருநகர வாசிங்டனில் இதுவே பெரியதாகும். இக்கவுண்டியின் தலைநகராக பேர்வேக்சு நகரம் விளங்குகிறது, ஆனாலும் பேர்வேக்சு நகரம் இக்கவுண்டியின் பகுதி அல்ல. பேர்வேக்சு நகரம் வர்சீனியா சட்டப்படி தன்னாச்சி பெற்ற தனி நகராகும். [3]
சராசரி குடும்ப வருவாய் 100,000 வெள்ளிகள் என்ற இலக்கை அடைந்த முதல் கவுண்டி இதுவாகும். அமெரிக்காவிலேயே அதிக வருவாய் பெரும் கவுண்டிகளில் இது இரண்டாவது இடமடைந்துள்ளது, அருகிலுள்ள லௌவுடன் கவுண்டி முதல் இடம். [4] [5]
அமெரிக்காவின் பல உளவு நிறுவனங்கள் இங்கு உள்ளன. நடுவண் ஒற்று முகமை, தேசிய வேவு அலுவலகம், தேசிய பயங்கரவாத முறியடிப்பு மையம், தேசிய ஒற்று அமைப்பின் இயக்குநரின் அலுவலகம் ஆகியவை இங்கு அமைந்துள்ள வகைகளில் முதன்மையானவை. இக்கவுண்டியின் பால்சு சர்ச்சில் ஏழு பார்ச்சூன் 500 நிறுவனங்கள் அமைந்துள்ளன. பால்சு சர்ச்சு தன்னாட்சி நகராட்சி ஆகும்.. [6]