ஹலாப் தொல்லியல் மேடு
From Wikipedia, the free encyclopedia
ஹலாப் தொல்லியல் மேடு (Tell Halaf) (அரபு மொழி: تل حلف) சிரியா நாட்டின் அல் ஹசாகா ஆளுநனரகத்தின் வடகிழக்கில், சிரியா-துருக்கி எல்லைப்புறத்தில் அமைந்த பண்டைய தொல்லியல் மேடு ஆகும். இத்தொல்லியல் மேட்டின் பகுதிகளில் கிமு 6,100 முதல் கிமு 5,400 வரை புதிய கற்கால ஹலாப் பண்பாடு சிறந்து விளங்கியது. ஹலாப் தொல்லியல் மேட்டில் புதிய கற்காலத்திய விலங்குகள் மற்றும் பல கோண வடிவில் வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது.[1]
ஹலாப் தொல்லியல் மேடு تل حلف | |
---|---|
சிதிலமடைந்த ஹலாப் தொல்லியல் மேட்டின் பகுதிகள் | |
இருப்பிடம் | அல்-ஹசாகா ஆளுனரகம், சிரியா |
ஆயத்தொலைகள் | 36.8266°N 40.0396°E / 36.8266; 40.0396 |
வகை | குடியிருப்புப் பகுதி |
வரலாறு | |
கட்டப்பட்டது | ஏறத்தாழ கிமு 6,100 |
பயனற்றுப்போனது | ஏறத்தாழ கிமு 5,400 |
காலம் | புதிய கற்காலம் |
கலாச்சாரம் | ஹலாப் பண்பாடு |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1911—1913, 1929 2006—present |
அகழாய்வாளர் | மேக்ஸ் வான் ஒப்பேன்கியும் லுட்ஸ் மார்ட்டின் அப்துல்- மசிஹ் பாக்டோ |
உரிமையாளர் | பொது |
பொது அனுமதி | Yes |
வெண்கலக் காலத்தில் ஹலாப் நகரம், இட்டைட்டு பேரரசினர் ஆட்சியில் இருந்தது. கிமு 10-ஆம் நூற்றாண்டில் ஆர்மீனிய நகர இராச்சியத்தின் பகுதியானது. ஹலாப் தொல்லியல் மேட்டை 1911—1913, 1929 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மேக்ஸ் வான் ஒப்பேன்கியும், லுட்ஸ் மார்ட்டின், அப்துல்- மசிஹ் பாக்டோ ஆகிய தொல்லியல் அறிஞர்கள் அகழ்வாய்வு செய்தனர். அகழாய்வின் போது கிடைத்த தொல்பொருட்கள் பல நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.