உரோமானிய மொழிகள்
From Wikipedia, the free encyclopedia
உரோமானிய மொழிகள் என்பன இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ஒரு பெருங்கிளைக் குடும்ப மொழிகள் ஆகும். இவையனைத்தும் இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த மொழிகளாகும். உரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), உரோமானியர் படையெடுத்து வென்ற நாடுகளில் பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழிகள் தோன்றின. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது.
உரோமானிய மொழிகள் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
|
இன வகைப்பாடு: |
— உரோமானிய மொழிகள் |
துணைக் குழுக்கள்: |
—
|
இன்று உலகம் முழுவதிலுமாக ஏறத்தாழ 700 மில்லியன் மக்கள் உரோமானிய மொழிகள் பேசுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றனர், உரோமானிய மொழிகள் பல இருந்தாலும், அவற்றுள் ஐந்து மொழிகள் முக்கியமானவை: 1) எசுப்பானிய மொழி, 2) போர்த்துகீசிய மொழி, 3) பிரெஞ்சு மொழி, 4) இத்தாலிய மொழி, 5) உருமானிய மொழி
உரோமானிய மொழிகள் பேசுவோரின் விகிதம்:
- எசுப்பானிய மொழி பேசுவோர் 47% (உலக வரிசையில் 5 ஆவது இடம்),
- போர்த்துகீசிய மொழி பேசுவோர் 26% (உலகில் 7 ஆவது இடம்),
- பிரெஞ்சு மொழி பேசுவோர் 11% (உலக வரிசையில் 11 ஆவது இடம்),
- இத்தாலிய மொழி பேசுவோர் 9%, (உலக வரிசையில் 18 ஆவது இடம்)
- உருமானிய மொழி பேசுவோர் 4% (உலக வரிசையில் 34 ஆவது இடம்)
- காட்டலான் மொழி பேசுவோர் 1%
- மற்ற மொழிகள் 2%.