தேடுபொறி
From Wikipedia, the free encyclopedia
தேடுபொறி அல்லது தேடற்பொறி என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில் குவிந்து கிடக்கும் தகவல்களில் இருந்தோ கணினியில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்குத் தேவையான தகவலைப் பெற உதவுகின்றது. பொதுவாகப் பாவனையாளர்கள் ஒரு விடயம் சம்பந்தமாகத் தேடுதலை ஒரு சொல்லை வைத்து தேடுவார்கள். தேடுபொறிகள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். தேடுபொறிகள் என்பது பொதுவாக இணையத் தேடுபொறிகளை அல்லது இணையத் தேடற்பொறிகளையே குறிக்கும். வேறுசில தேடுபொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். இணைய தேடு பொறிகள் பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையான மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேறுசில தேடற்பொறிகள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள் போன்ற இணையத் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இணையத்தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது தேடு பொறிகள் அல்காரிதங்களைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில தேடற்பொறிகளோ தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில தேடுபொறிகளே தேடலை மேற்கொள்ளும்.
ஆரம்பகாலத்தில் ASCII முறை வரியுருக்களை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது ஒருங்குறி எழுத்துக்குறிமுறையை பல தேடுபொறிகளும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அந்த மொழியிலான பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.