அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
நியூயார்க் நகரத்திலுள்ள ஒரு அருங்காட்சியகம் / From Wikipedia, the free encyclopedia
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (American Museum of Natural History) என்பது உலகிலுள்ள அனைத்து இயற்கை அறிவியல் காட்சிச் சாலைகளுள் மிகப்பெரியதாகக் கருதப் படுகிறது. மனித சமுதாயத்திற்குப் பெருமளவு பயன்பட்டுவரும் இந்த அருங்காட்சியகத்தில் பல தலைசிறந்த அறிவியல் அறிஞர்களும், திறமை மிகுந்த ஆய்வாளர்களும்.. பணி செய்கின்றனர். நியூயார்க் நகரத்திலுள்ள மையப் பூங்காவின் மேற்குப் பகுதியில், இதன் தலைமையகம் அமைந்திருக்கிறது. நியூயார்க்கிலுள்ள ஹண்டிங்டன் (Huntington), புளோரிடாவிலுள்ள பிளாசிட் ஏரிப்பகுதி (Lake Placid), அரிசோனாவின் போர்ட்டல் (Portal), பகாமாத் (Bahamas) தீவுகளைச் சேர்ந்த பிமினித்தீவு (Bimini island) போன்ற இடங்களில் இதன் துணை நிலையங்கள் உள்ளன. ஹேடன் வான் காட்சியகம் (Hayden planetarium), நியூயார்க் தலைமையகத்தில் சிறப்பான பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஓர் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் இயக்குநர் இந்த அறக்கட்டளையினரால் நியமிக்கப்படுகிறார். இங்கு நுாற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறுநூறுக்கு மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இதனை நல்ல முறையில் நடத்துவதற்குத் தேவையான நிதி, நியூயார்க் பெருநகர மன்றம் அளிக்கும் நல்கை, தனியார் அறக்கட்டளைகள், உறுப்பினர் கட்டணம் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது. அருங்காட்சியகத்திற்குள் செல்ல நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. ஆனால் வான்காட்சியகத்தினுள் செல்லக் கட்டணம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் மூன்று மில்லியன் மக்கள் அருங்காட்சியகத்தையும், வான்காட்சியகத்தையும் கண்டு களிக்கின்றனர். இந்த அருங்காட்சியத்தைத் தொடங்கவேண்டுமென, முதன்முதலில் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் (Harvard University) பேராசிரியராகப் பணியாற்றிய லுாயிஸ் அகாசிஸின் (Louis Agassiz) மாணவர், ஆல்பர்ட் எஸ். பிக்மோர் (Albert S. Bickmore) கூறினார்.
மேற்கு நடுப்பூங்காவில் (Central Park West)இருந்து கிழக்கு வாசல் தோற்றம் | |||||||||||||||
நிறுவப்பட்டது | 1869; 155 ஆண்டுகளுக்கு முன்னர் (1869)[1] | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | Central Park West at 100th Street (Manhattan) | ||||||||||||||
வகை | இயற்கை வரலாறு | ||||||||||||||
வருனர்களின் எண்ணிக்கை | 5 million (2016)[2] | ||||||||||||||
இயக்குனர் | Ellen V. Futter | ||||||||||||||
பொது போக்குவரத்து அணுகல் | நியூயார்க் நகரப் பேருந்து: M7, M10, M11, M79 நியூயார்க் நகர சப்வே: trains at 81st Street – Museum of Natural History (IND Eighth Avenue Line) | ||||||||||||||
வலைத்தளம் | AMNH.org | ||||||||||||||
|