அரச மலேசிய காவல் துறை
From Wikipedia, the free encyclopedia
மலேசிய காவல் துறை அல்லது அரச மலேசிய காவல் துறை (மலாய்: Polis Diraja Malaysia (PDRM); ஆங்கிலம்: Royal Malaysia Police; (RMP); சீனம்: 马来西亚皇家警察) என்பது மலேசிய உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஓர் அரசு சார்ந்த அமைப்பாகும். இதன் தலைமையகம் கோலாலம்பூர் மாநகரில் புக்கிட் அமான் எனும் இடத்தில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் அரச மலேசிய காவல் துறைRoyal Malaysia Police Polis Diraja Malaysia, குறிக்கோள் ...
அரச மலேசிய காவல் துறை Royal Malaysia Police Polis Diraja Malaysia | |
---|---|
மலேசிய காவல் துறையின் சின்னம் | |
மலேசிய காவல் துறையின் கொடி | |
குறிக்கோள் | காவல்துறையும் சமூகமும் பிரிக்கப்படாது (Police and The Community, Will Not Separate) (Polis dan Masyarakat, Berpisah Tiada) |
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 25 மார்ச்சு 1807; 217 ஆண்டுகள் முன்னர் (1807-03-25) |
முந்தைய துறைகள் |
|
தன்னார்வலர்கள் | அரச மலேசிய தன்னார்வலர் காவல் துறை (Sukarelawan Simpanan Polis Diraja Malaysia) (Sukarelawan Siswa Polis Diraja Malaysia) |
சட்ட ஆளுமை | காவல்துறை |
அதிகார வரம்பு அமைப்பு | |
தேசிய நிலை (செயல்பாட்டு எல்லை) | மலேசியா |
செயல்பாட்டு அதிகார வரம்பு | மலேசியா |
அளவு | 330,803 km2 (127,724 sq mi) (மக்கள் தொகை: 32767900) |
சட்ட அதிகார வரம்பு | தேசிய நிலை |
ஆட்சிக் குழு | மலேசிய அரசாங்கம் |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | புக்கிட் அமான், கோலாலம்பூர், மலேசியா |
சேவையாளர்கள் | 137,574 |
அமைச்சர் |
|
துறை நிருவாகி |
|
அமைச்சு | மலேசிய உள்துறை அமைச்சு |
வசதிகள் | |
காவல் நிலையங்கள்s | 1,000 |
காவல் துறை வாகனங்கள்s | புரோட்டோன் பிரிவி, புரோட்டோன் இன்சுபிரா, புரோட்டோன் வாஜா, மிட்சுபிசி லான்சர், மிட்சுபிசி அவுட்லேண்டர், தொயோத்தா அய்லக்சு, ஹோண்டா சிவிக், புரோட்டோன் X70. |
இணையத்தளம் | |
www |
மூடு
அரச மலேசிய காவல் துறையின் சேவைகளில் சட்ட அமலாக்கம்; பொதுப் பாதுகாப்பு; போக்குவரத்து கட்டுப்பாடு; குற்ற விசாரணைகள்; கலவரக் கட்டுப்பாடுகள் போன்றவை அடங்கும்.[2]
2023 மே 27-ஆம் தேதி நிலவரப்படி, காவல்துறை தலைமை இயக்குநர் (Inspector-General of Police) (IGP) டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி (Tan Sri Acryl Sani Hj. Abdullah Sani) என்பவரின் தலைமையில் இப்போதைய மலேசிய காவல்துறை இயங்கி வருகிறது.[3]