ஆஷிஸ் நந்தி
இந்திய கல்வியாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆஷிஸ் நந்தி ( வங்காள மொழி: আশিস নন্দী ; பிறப்பு 1937) என்பவர் ஒரு இந்திய அரசியல் உளவியலாளர், சமூக கோட்பாட்டாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் ஒரு பயிற்சிபெற்ற மருத்துவ உளவியலாளர். நந்தி ஐரோப்பிய காலனித்துவம், வளர்ச்சி, நவீனத்துவம், மதச்சார்பின்மை, இந்துத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தி, அகல்குடிவாதம், கற்பனாவாதம் ஆகியவை குறித்து தத்துவார்த்த விமர்சனங்களை வழங்கியுள்ளார். அகல்குடிவாதம் மற்றும் விமர்சன பாரம்பரியம் தொடர்பான மாற்று கருத்துகளையும் வழங்கியுள்ளார். மேற்கூறியவற்றைத் தவிர, இந்தியாவின் வணிக திரைப்படத்தின் அசல் வரலாற்றையும், அரசு மற்றும் வன்முறை பற்றிய விமர்சனங்களையும் வழங்கியுள்ளார்.
ஆஷிஸ் நந்தி | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பேராசிரியர் நந்தி 2007 இல் ஜப்பானின் ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு விழாவில். | |||||||||||||||||
பிறப்பு | 1937 (அகவை 86–87) பிரித்தானிய இந்தியா, பீகார், பாகல்பூர் | ||||||||||||||||
தொழில் | அரசியல் உளவியலாளர், சமூக கோட்பாட்டாளர் மற்றும் விமர்சகர் | ||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
கல்வி நிலையம் | குஜராத் பல்கலைக்கழகம் (முனைவர்) | ||||||||||||||||
துணைவர் | உமா நந்தி | ||||||||||||||||
பிள்ளைகள் | அதீதி (மகள்) | ||||||||||||||||
குடும்பத்தினர் | பிரிதிஷ் நந்தி மற்றும் மனீஷ் நந்தி (சகோதிரர்) | ||||||||||||||||
|
இவர் பல ஆண்டுகளாக வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தின் (சி.எஸ்.டி.எஸ்) மூத்த சகா மற்றும் முன்னாள் இயக்குநராக இருந்தார். இன்று, இவர் இந்த நிறுவனத்தில் மூத்த கௌரவ சக உறுப்பினராக உள்ளார். மேலும் புதுதில்லியில் உள்ள த கமிடி ஆப் கல்சுரல் சாய்ஸ் அண்ட் குலோபல் கல்சர் குழுவின் தலைவராக இருக்கிறார். [1]
நந்தி 2007 இல் ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசைப் பெற்றார். [2] 2008 ஆம் ஆண்டில் , சர்வதேச அமைதிக்கான தி கார்னகி எண்டோமென்ட் வெளியிட்ட பாரின் பாலிசி இதழின் தலைசிறந்த 100 அறிவுஜீவிகள் பட்டியலுக்கான வாக்கெடுப்பு பட்டியலில் இவர் இடம்பிடித்தார். [3]