இசுபகான்
From Wikipedia, the free encyclopedia
இசுபகான் (அல்லது இஸ்பஹான், ஆங்கிலம்: Isfahan, பாரசீக மொழி: اصفهان, ஒலிப்புⓘ) என்பது ஈரானின் இசுபகான் மாகாணத்தின் தலைநகர் ஆகும். இது ஆங்கில உச்சரிப்பில் இஸ்பகான், செப்பகான், எஸ்பகான், மற்றும் கிஸ்பகான் (Ispahan, Sepahan, Esfahan or Hispahan) ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இசுபகான் தேகுரானுற்கு 340 கிலோமீட்டர்கள் (211 மைல்கள்) தேற்கில் அமைந்துள்ளது. இது ஈரானின் தெகுரான் மற்றும் மசுகாத்திற்கு அடுத்த மூன்றாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகரமாகும், மற்றும் இதன் மக்கள் தொகை 1,755,382 குடிகளைக் கொண்டுள்ளது. 2011 இன் மக்கள் தொகை அடிப்படையில் 3,793,101 ஐ மக்கள் தொகையாகக் கொண்ட இந்த கிரேட்டர் இசுபகான் பிரதேசம் ஈரானில் தெகுரான் மற்றும் மசுகாத்திற்கு அடுத்த மிகப் பிரபலமான பெருநகரப் பகுதியாகும்.[3]
இசுபகான்
Isfahan اصفهان | |
---|---|
நகரம் | |
பழங்காலப் பெயர்கள்: எசுபடானா, எசுப்பகான் (Spadana, Spahān) | |
அடைபெயர்(கள்): Nesf-e Jahān (Half of the world) | |
Isfahan | |
நாடு | ஈரான் |
மாகாணம் | Isfahan |
மண்டலம் | Isfahan |
பாக்ச்சு | Central |
அரசு | |
• Governor General | Rasul Zargar |
• Mayor | Mehdi Jamali Nejad |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 493.82 km2 (190.66 sq mi) |
ஏற்றம் | 1,574 m (5,217 ft) |
மக்கள்தொகை (2012) | |
• நகரம் | 17,55,382 |
• Population Rank in Iran | 3th |
Population Data from 2012 Census[2] | |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT 21 மார்ச்சு – 20 செப்டம்பர்) |
இணையதளம் | www.isfahan.ir |
சரின்ஷர், பூலாட்ஷார் and நஜபாபாத், சே-தே, ஷகின்ஷர், மொபறகே, பாலவர்ஜன் மற்றும் சர்மகின் ஆகிய நகரங்களை இந்த பெருநகரப் பகுதி கொண்டுள்ளது.
இசுபகான் ஈரானில் கடக்கும் முக்கிய வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைக்களில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது குறிப்பிடத்தக்கது. இந்த இசுபகான் நகரம் 1050 தொடக்கம் 1722 வரையிலான காலப்பகுதியில் தழைத் தோங்கி விளங்கியது. குறிப்பாக முதலில் 16ம் நூற்றாண்டில் சபவித் வமசத்தினரின் கீழான காலப்பகுதியிலே ஆகும். இரண்டாவதாக இதன் வரலாற்றில் பாரசீகத்தின் தலைநகரமாக விளங்கிய போதே ஆகும். தற்பொழுதும் இந்த நகரம் தனது கடந்த பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல அழகான அகலமான தெருக்களையும், பாலங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிவாயிற்களையும் கொண்ட அதன் பாரசீக-இசுலாமிய கட்டடக்கலைக்கு மிகவும் பிரபல்யமாக விளங்குகிறது. இது "Esfahān nesf-e- jahān ast" (இசுபகான் தான் உலகின் அரைவாசி, Isfahan is half of the world) பாரசீக பழமொழிக்கு வழிவகுத்தது.[4]
இசுபகானில் உள்ள இமாம் சதுக்கம் உலகிலுள்ள மிகப்பெரிய சதுக்கங்களில் ஒன்றாகவும் மற்றும் ஈரானிய மற்றும் இசுலாமிய கட்டிடக்கலைக்கு முன்னுதாரணமாக காணப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு உலகப் பாரம்பரியக் களமாகும்.