இந்தோனேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அர்ங்காட்சியகம் / From Wikipedia, the free encyclopedia
இந்தோனேசிய அருங்காட்சியகம் (Indonesia Museum) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் தாமான் மினி இந்தோனேஷியா இந்தாக் (TMII) எனப்படுகின்ற அழகான இந்தோனேசிய சிறிய பூங்கா என்றவிடத்தில் அமைந்துள்ள ஒரு மானுடவியல் மற்றும் இனவியல் அருங்காட்சியகம் ஆகும்.[1] இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் வசிக்கும் பல்வேறு இனக்குழுக்களின் கலை மற்றும் கலாச்சாரங்களின் எச்சங்கள் இந்த அருங்காட்சியகம் அதிகமாகக் காணப்படுகின்றன. மற்றும் நவீன இந்தோனேசியாவை உருவாக்கக் காரணமான இந்தோனேசிய தீபகற்பத்தில் காணப்படுகின்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகம் பாலினீய கட்டிடக்கலையில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1,000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் சமகால இந்தோனேசிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய உடைகள் காட்சியில் உள்ளன.
இந்தோனேசிய அருங்காட்சியக முதன்மைக் கட்டடம் | |
நிறுவப்பட்டது | 1980 |
---|---|
அமைவிடம் | தமன் மினி இந்தோனேசியா இந்தா, ஜகார்த்தா, இந்தோனேசியா |
வகை | இனவியல் மற்றும் மானுடவியல் |
வலைத்தளம் | Museum Indonesia |