இரும்பு(II) ஆக்சைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
இரும்பு(II) ஆக்சைடு (Iron(II) oxide) என்பது FeO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்ரசு ஆக்சைடு, இரும்பு மோனாக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இரும்பினுடைய மூன்று முக்கியமான ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். இரும்பு(III ) ஆக்சைடு (Fe2O3) மற்றும் இரும்பு(II,III) ஆக்சைடு (Fe3O4) என்பவை ஏனைய இரண்டு ஆக்சைடுகளாகும். எண்ணற்ற இரும்பு ஆக்சைடுகளில் ஒன்றான உசுடைட்டு என்ற ஆக்சைடு கனிமம் இரும்பு(II) ஆக்சைடின் கனிம வடிவமாகும். நீர், காரங்கள், ஆல்க்கால் போன்றவற்றில் இது கரையாது. ஆனால் அமிலத்தில் கரைந்து விடும். கருப்பு நிற தூளாக இருக்கும் இரும்பு(II) ஆக்சைடு சில சமயங்களில் துருவைப் போல தோற்றமளித்து குழப்பமடையச் செய்யும். துரு என்பது நீரேற்ற இரும்பு(III) ஆக்சைடு அல்லது பெர்ரிக் ஆக்சைடு என்பதை கவனித்திற் கொள்ள வேண்டும். விகிதவியலற்ற சேர்மங்கள் குடும்பத்தில் இரும்பு(II) ஆக்சைடும் ஓர் உறுப்பினர் என்று கருதப்படுகிறது. இவ்வகையில் இரும்பின் இயைபு அளவு குறைவாக Fe0.84O முதல் Fe0.95O வரை என்ற விகிதத்தில் காணப்படும் [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
பெர்ரசு ஆக்சைடு, இரும்பு மோனாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
1345-25-1 Y | |
ChEBI | CHEBI:50820 Y |
ChemSpider | 14237 Y |
Gmelin Reference |
13590 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14945 |
| |
UNII | G7036X8B5H Y |
பண்புகள் | |
FeO | |
வாய்ப்பாட்டு எடை | 71.844 கி/மோல் |
தோற்றம் | கருப்பு படிகங்கள் |
அடர்த்தி | 5.745 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,377 °C (2,511 °F; 1,650 K)[1] |
கொதிநிலை | 3,414 °C (6,177 °F; 3,687 K) |
கரையாது | |
கரைதிறன் | காரம், எத்தனால் போன்ரவற்ரில் கரையாது அமிலத்தில் கரையும் |
+7200•10−6செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.23 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | காற்றில் எரியலாம் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0793 |
Autoignition temperature |
மாறுபடும் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இரும்பு(II) புளோரைடு, இரும்பு(II) சல்பைடு, இரும்பு(II) செலீனைடு, இரும்பு(II) தெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மாங்கனீசு(II) ஆக்சைடு, கோபால்ட்(II) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |