இலக்கு (துடுப்பாட்டம்)
துடுப்பாட்டத்திற்குத் தேவைப்படும் கருவி / From Wikipedia, the free encyclopedia
இலக்கு (Wicket) என்பது துடுப்பாட்டத்திற்குத் தேவைப்படும் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு மட்டையாளரை ஆட்டமிழப்பு செய்யப் பயன்படுகிறது. இது வீசுகளத்தின் இரு முனைகளில் உள்ள எல்லைக்கோடுகளில் அமைக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக இலக்குக்கு அருகில் நிற்கும் மட்டையாடுபவர், தன்னை நோக்கி வீசப்படும் பந்து இலக்கில் படாதவாறு மட்டையால் தடுப்பார். மேலும் பந்தை களத்தில் அடித்துவிட்டு ஓட்டங்கள் எடுக்கவும் முயற்சிப்பார்.