இழைய அழுகல்
From Wikipedia, the free encyclopedia
இழைய அழுகல் (Gangrene) என்பது இழையநசிவு மூலம் அதிகளவிலான உடல் இழையங்கள் இறப்புக்குள்ளாகும்போது, இறப்பு ஏற்படக்கூடிய அளவிற்கு, உடல் பகுதியானது தீவிரமாக பாதிக்கப்படும் நிலையாகும்.[1][2] ஏதாவது உடல் காயங்கள் ஏற்பட்டதனாலோ, அல்லது தொற்றுநோய்களின் தாக்கத்தினாலோ, அல்லது குறிப்பிடக்கூடிய ஒரு நாட்பட்ட நோய்த் தாக்கத்தினால், குருதிச் சுற்றோட்டத்தில் பாதிப்பு ஏற்படும்போதோ இத்தகைய இழைய அழுகல் ஏற்படலாம்[2]. இழையங்களுக்கான குருதி வழங்கலில் ஏற்படும் தடையும், அதனால் உயிரணுக்களில் ஏற்படும் தொடர் இறப்புமே, இழைய அழுகலுக்கான முதன்மையான காரணியாக அறியப்படுகின்றது.[3] நீரிழிவு நோய், நீண்ட கால புகைத்தல் போன்ற நிலைகள் இவ்வகை இழைய அழுகலை அதிகரிக்கவல்ல சூழ் இடர் காரணிகளாக உள்ளன.[2][3]
விரைவான உண்மைகள் இழைய அழுகல், வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
இழைய அழுகல் | |
---|---|
Dry gangrene of the 1st to 4th toes of the right foot in a man with diabetes. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | அறுவைச் சிகிச்சை |
ஐ.சி.டி.-10 | R02., I70.2, E10.2, I73.9 |
ஐ.சி.டி.-9 | 040.0, 785.4 |
நோய்களின் தரவுத்தளம் | 19273 |
பேசியண்ட் ஐ.இ | இழைய அழுகல் |
ம.பா.த | D005734 |
மூடு