உள் மங்கோலியா
சீனாவில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
உள் மங்கோலியா (Inner Mongolia) 1947ஆம் ஆண்டு முதல் வடக்கு சீனாவில் அமைந்த தன்னாட்சி பெற்ற மாகாணமாகும். இதன் தலைநகரம் ஹோஹாட் நகரமாகும். உள் மங்கோலியா, வடக்கில் மங்கோலியாவை எல்லையாக கொண்டது. சீனாவின் பரப்பில் 12% விழுக்காட்டை உள் மங்கோலியா கொண்டுள்ளது. உள் மங்கோலியா, செங்கிஸ் கான் ஆட்சியில் இருந்த பகுதியாகும்.
விரைவான உண்மைகள் உள் மங்கோலியா 内蒙古自治区, பெயர்ச்சூட்டு ...
உள் மங்கோலியா
内蒙古自治区 | |
---|---|
சீனாவின் தன்னாட்சிப் பகுதி | |
உள் மங்கோலியாவின் அமைவிடம் | |
பெயர்ச்சூட்டு | மலைத்தொடர்கள், மேய்ச்சல் நிலங்கள், பாலைவனங்கள் |
தலைநகரம் | உலன்ஹாட் (1947–1949) சாங்ஜியாகௌ (1950–1952) ஹோஹாட் (1953 முதல்) |
பெரு நகரம் | ஹோஹாட் |
மாவட்டங்கள் | 12, 101 நகரங்கள், 1425 சிறுநகரங்கள் |
அரசு | |
• சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலர் | வாங் சூன் |
• ஆளுனர் | பகதூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 11,83,000 km2 (4,57,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3வது இடம் |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 2,47,06,321 |
• தரவரிசை | 23வது இடம் |
• அடர்த்தி | 20.2/km2 (52/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 28வது இடம் |
மக்கள் வகைப்பாடு | |
• இனக் குழுக்கள் | ஹன் சீனர்கள்- 79% மங்கோலியர்கள் - 17% மஞ்சு மக்கள் - 2% ஹூய் மக்கள் - 0.9% தவுர் மக்கள் - 0.3% |
• மொழிகள் | மங்கோலிய மொழி]] [3] மாந்தரின் சீன மொழி |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-15 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2013) | 273.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் |
தனி நபர் வருமானம் | 10,992 அமெரிக்க டாலர் |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.722 |
இணையதளம் | http://www.nmg.gov.cn |
மூடு
உள் மங்கோலியா, சீனாவின் மூன்றாம் பெரிய மாகாணாமாகும். 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கட்தொகை 24,706,321 ஆகும். மக்கள் தொகை அடிப்படையில், சீனாவில் 23வது இடத்தில் உள்ளது.[4] உள் மங்கோலியாவின் அலுவல் மொழிகள், சீனம் மற்றும் மங்கோலிய மொழி ஆகும். மக்கள் பின்பற்றும் முக்கிய சமயம், திபெத்திய பௌத்தம் ஆகும்.