எருது
From Wikipedia, the free encyclopedia
எருது அல்லது காளை (Ox) என்பது மாட்டில் ஆண் பால் விலங்கை குறிப்பதாகும். இது ஒரு வேலைக்கார விலங்காக பயிற்சி பெற்ற கால்நடை வகையாகும். பொதுவாக எருதுகள் என்பது ஆண்மை நீக்கப்பட்ட மாடுகளாகும். இதனால் இவற்றின் ஆக்குரோசம் குறைவதால் கட்டுப்படுத்த எளிதாகிறது. சில பகுதிகளில் பசுக்கள் (வயது வந்த பெண்கள்) அல்லது காளைகள் (அப்படியே ஆண்கள்) வேலைக்காகப் பயன்படுத்தப்படலாம்.
எருதுகள் உழவு, போக்குவரத்து, (பாரவண்டி இழுத்தல், சவாரி வண்டி இழுத்தல்), கதிர் அடித்தலில் தானியங்களை மிதிப்பது மற்றும் செக்கு, நீர் இரைத்தல் உள்ளிட்ட இயந்திரங்கள் இயக்கத்திற்காகப் பயன்படுத்துதல். சிறு மரங்களை வனங்களில் சுமந்து செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக எருதுகள் இணையாக நுகத்தடி மூலம் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சாலைகளில் வீட்டுப் பொருட்களை வண்டியில் எடுத்துச் செல்வது போன்ற இலகுவான வேலைகளுக்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் கனமான வேலைக்கு, மேலும் ஒரு இணை தேவைக்கேற்ப சேர்க்கப்படும். கடினமான தரையில் அதிக சுமைக்குப் பயன்படுத்தப்படும் குழு ஒன்பது அல்லது பத்து ஜோடிகளுக்கு மேல் இருக்கலாம்.