ஓக்காவேங்கோ கடைமடை
From Wikipedia, the free encyclopedia
ஓக்காவேங்கோ கடைமடை (ஆங்கில பெயர் : Okavango Delta) என்பது ஆப்பிரிக்கா கண்டத்தில் தென்னாப்பிரிக்கா நாட்டின் அருகில் போட்சுவானாவில் அமைந்துள்ள நீர் வழி மண்டலமான டெக்டானிக் நீளக்கால்வாய் பகுதியில் கலகாரி பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள ஒரு கழிமுகத்தெதிர் நிலம் ஆகும். ஓக்காவேங்கோ ஆற்றிலிருந்து வழிந்துவரும் நீராதாரமானது எந்த ஒரு கடலுக்கோ, பெருங்கடலுக்கோ, செல்லாமல் இந்த ஓக்காவேங்கோ கடைமடையை மட்டுமே செழிப்படையச் செய்கிறது. இந்த ஆற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 11 கன மீட்டர் அளவிற்கு தண்ணீர் பாய்ந்து 6,000-15,000 கிமீ தூரத்திற்கு பரவுகிறது. இவற்றில் கொஞ்ச நீர் மட்டும் நகாமி என்ற ஏரியில் தேங்குகிறது. இப்பகுதியில் மெரொமி வனவிலங்கு பாதுகாப்புப் பகுதியும், தேசிய பூங்கா ஒன்றும் இந்த டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி ஆப்பிரிக்காவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தன்சானியா நாட்டில் உள்ள அருசா நகரில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]
ஓக்காவேங்கோ கடைமடை | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
கழிமுகத்தெதிர் நிலத்தின் வரைபடம். | |
வகை | இயற்கையானது |
ஒப்பளவு | vii, ix, x |
உசாத்துணை | 1432 |
UNESCO region | ஆப்பிரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2014 (38rd தொடர்) |
இப்பகுதியில் அமைந்துள்ள மோகடிகா என்ற ஏரி ஆதிகாலத்தில் வறண்டிருந்ததாக கருதப்படுகிறது. இது உலகிலேயே உள்நாட்டில் அமைந்துள்ள கடைமடைப் பகுதியாக நம்பப்பட்டாலும் இது தனிநாட்டில் அமைந்திருக்கவில்லை. இதே போல் தெற்கு சூடான் பகுதில் நைல் நதியும் மாலி நாட்டில் நைகீர் டெல்டாப் பகுதியும் இதேபோல் அமைந்துள்ளது. [2]