கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா)
இந்திய அரசு அமைச்சகம் / From Wikipedia, the free encyclopedia
கல்வித் துறை அமைச்சகம் (Ministry of Education) இதற்கு முன்னால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இயங்கியது (1985-2020). புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் கல்வித் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.[2]
Ministry மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15) |
ஆட்சி எல்லை | இந்தியக் குடியரசு |
தலைமையகம் | சாஸ்திரி பவன், Dr. ராஜேந்திர பிரசாத் சாலை, புது தில்லி |
ஆண்டு நிதி | ₹99,312 கோடி (US$12 பில்லியன்) (2020–21 est.)[1] |
அமைச்சர் | |
பொறுப்பான துணை அமைச்சர்கள் |
|
Ministry தலைமைகள் | |
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | education |
தற்போதைய கல்வித் துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான்[3]. இணை அமைச்சர்களாக சஞ்சய் ஷாம்ராவ், இராஜ்குமார் ரஞ்சன் சிங், அன்னபூர்ணா தேவி யாதவ் மற்றும் சுபாசு சர்க்கார் உள்ளனர்.
சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவில் கல்வி அமைச்சகம் இருந்தது. ஆனால் 1985 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அதன் பெயரை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) என்று மாற்றினார். புதிய "தேசிய கல்வி கொள்கை 2020" உருவாக்கியபின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மீண்டும் கல்வித் துறை அமைச்சகமாக மாற்றப்பட்டது.[4]
அமைச்சகம் மேலும் இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை முதன்மை, இடைநிலை, உயர்நிலைக் கல்வி, வயது வந்தோர் கல்வி மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றைக் கையாள்கிறது. உயர்கல்வித் துறையானது பல்கலைக்கழக அளவிலான கல்வி, தொழில்நுட்பக் கல்வி, உதவித்தொகை போன்றவற்றைக் கையாள்கிறது.