கிழக்கு ஐரோப்பிய சமவெளி
From Wikipedia, the free encyclopedia
கிழக்கு ஐரோப்பியச் சமவெளி (East European Plain) என்பது ஐரோப்பாவிலுள்ள ஒரு மிகப்பெரியச் சமவெளிசமவெளி ஆகும். இது இரசியாவின் அறிவியல் அறிஞர்களால் இரசியச் சமவெளி என்றும்[2][3] வரலாற்றின்படி சர்மாட்டிக் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது.[4] இது வட மற்றும் மத்திய ஐரோப்பியச் சமவெளிக்குக் கிழக்காக நீண்டு பரந்து உள்ளது,[5] மேலும் இது பல பீடபூமிகளைத் தன்னகத்தே கொண்டு 25 டிகிரி தீர்க்கரேகைக்குக் கிழக்காக நீண்டுள்ளது. இதில் மேற்காக உள்ள வாலினியன் – பொடொலியன் உயர்நிலம், மத்திய இரசிய உயர்நிலம் மேலும் வோல்கா உயர்நிலத்தைச் சூழ்ந்துள்ள கிழக்கு எல்லையும் அடங்கும். இந்தச் சமவெளியானது ட்னீபர் வடிநிலம், ஒகா-டான் தாழ்நிலம் மற்றும் வோல்கா வடிநிலம் போன்ற தொடர் பெரிய ஆற்று வடிநிலங்கள் அடங்கியது ஆகும். தெற்குமுனையின் ஐரோப்பியச் சமவெளி நெடுகிலும் காகசஸ் மற்றும் கிரிமியன் மலைத்தொடர்கள் உள்ளன.[5] வட ஐரோப்பிய சமவெளியோடு (வடமேற்கு ஃபிரான்சு, நெதர்லாந்து, ஜெர்மனி முதல் வடகிழக்கு போலந்து வரை செல்கிறது) பால்டிக்ஸ் (எஸ்டோனியா, லட்வியா மற்றும் லிதுவானியா), மோல்டோவா, தென்மேற்கு ரோமானியா மற்றும் அதன் தென் எல்லை விரிபரப்பு வடபல்கேரியாவிலுள்ள டானுபியன் சமவெளி (லுடோகோரி மற்றும் தெற்கு டோப்ருஜா அடங்கும்), இது பெரும் ஐரோப்பியச் சமவெளியின் ஐரோப்பிய நிலத்தில் மலைகளற்ற பெரும்பகுதிகளைக் கொண்ட நிலப்பரப்பாக உள்ளது.[6]