சினிங்
சீனாவின் சிங்கையில் உள்ள ஒரு மாவட்டநிலை நகரம் / From Wikipedia, the free encyclopedia
சினிங் (Xining, எளிய சீனம்: 西宁 சினிங், ஜிலிங்) என்பது மேற்கு சீனாவின் சிங்கை மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[3] திபெத்திய பீடபூமியில் இதுவே மிகப் பெரிய நகரமாகும். 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 2,208,708 ஆகும் அதில் 1,198,304 பேர் நான்கு நகர்ப்புற மாவட்டங்களில் வசிக்கின்றனர்.[4]
சினிங்
西宁市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
சிங்கையில் சினிங் நகர எல்லையின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 36°38′N 101°46′E | |
நாடு | சீனா |
மாகாணம் | சிங்கை |
அரசு | |
• கட்சி செயலாளர் | வாங் ஜியாவோ |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 7,372 km2 (2,846 sq mi) |
• நகர்ப்புறம் (2018)[1] | 189 km2 (73 sq mi) |
• மாநகரம் | 343 km2 (132 sq mi) |
ஏற்றம் | 2,275 m (7,464 ft) |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு) | |
• மாவட்டநிலை நகரம் | 22,08,708 |
• அடர்த்தி | 300/km2 (780/sq mi) |
• நகர்ப்புறம் (2018)[2] | 14,60,000 |
• நகர்ப்புற அடர்த்தி | 7,700/km2 (20,000/sq mi) |
• பெருநகர் | 11,98,304 |
• பெருநகர் அடர்த்தி | 3,500/km2 (9,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
அஞ்சல் எண் | 810000 |
Area code | 971 |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-QH-01 |
வாகன உரிமம் தட்டு முன்னொட்டுகள் | 青A |
இணையதளம் | www.xining.gov.cn (சீனம்) |
சினிங் | |||||||||||||||||||||||||||||||||
"சினிங்" என்பது பாரம்பரிய (மேல்) மற்றும் எளிய (கீழ்) சீன எழுத்துகளில் | |||||||||||||||||||||||||||||||||
Chinese name | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 西宁 | ||||||||||||||||||||||||||||||||
பண்டைய சீனம் | 西寧 | ||||||||||||||||||||||||||||||||
Postal | சினிங் அல்லது ஜிலிங் | ||||||||||||||||||||||||||||||||
Literal meaning | "மேற்கத்திய அமைதி" | ||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||
திபேத்தியப் பெயர் | |||||||||||||||||||||||||||||||||
Tibetan | ཟི་ལིང | ||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||
மங்கோலியப் பெயர் | |||||||||||||||||||||||||||||||||
மங்கோலிய சிரில்லிக் | Сэлэнг | ||||||||||||||||||||||||||||||||
மொங்கோலிய எழுத்துமுறை | ᠰᠢᠨᠢᠩ | ||||||||||||||||||||||||||||||||
|
இந்நகரம் வடக்குப்பட்டுப் பாதையின் ஹெக்ஷி நடைபாதையுடன் சேர்ந்த வணிக இடமாகச் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. மேற்கிலிருந்து வரும் நாடோடிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்புக்கான ஒரு கோட்டையாக ஹான், சுயி, தாங் மற்றும் சாங் அரசமரபினருக்கு இப்பகுதி இருந்து வந்துள்ளது. இது பல காலமாக கன்சு மாகாணத்தின் பகுதியாக இருந்துள்ளது. 1928ல் சிங்கை மாகாணத்தில் இணைக்கப்பட்டது. இது மத ரீதியாக முஸ்லிம்கள் மற்றும் புத்த மதத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த டோங்குவான் பள்ளிவாசல் மற்றும் தயேர் மடாலயம் ஆகிய தளங்களைக் கொண்டுள்ளது. இந்நகரம் ஹுவாங்ஷுயி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதியில் அமைந்திருப்பதால் இது குளிர்ந்த பகுதி வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது லாசா மற்றும் திபெத் ஆகிய பகுதிகளுக்கு ரயில் மூலமும் லான்சோவு, கன்சு மற்றும் க்ஷின்ஜியாங்கின் உரும்கி ஆகிய பகுதிகளுக்கு வேகமான ரயில் மூலமும் இணைக்கப்பட்டுள்ளது.