சின்கான்சென்
From Wikipedia, the free encyclopedia
சின்கான்சென் (சப்பானிய மொழி: 新幹線, புதிய பெருந்தடம்) என்பது ஜப்பானிய இரும்புப்பாதை குழும நிறுவனங்களால் இயக்கப்படும், ஜப்பானின் அதிவேக இரும்புவழித்திட பிணையம் (network) ஆகும். 1964-ஆம் ஆண்டு டோகாய்டோ சின்கான்சென் (515.4 கி.மீ.) தொடங்கியது முதல்,[1] இதன் பிணையம் விரிவாக்கப்பட்டு, தற்போது 2,615.7 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 240–320 கி.மீ. வேகமும் கொண்ட சின்கான்சென் தடங்களையும்; 283.5 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகமும் கொண்ட சிறு-சின்கான்சென் தடங்களையும் கொண்டுள்ளது. [2] தற்போது இப்பிணையம் ஓன்சூ மற்றும் கியூஷூ தீவுகளில் உள்ள முக்கிய நகரங்களை, வட தீவான ஹொக்கைடோவில் புதிதாக கட்டப்பட்ட விரிவாக்கத்துடன் இணைக்கிறது. இந்த பிணையங்களில் ஓடும் அதிவேக தொடருந்துகள்தான், தோட்டா தொடருந்து (ஆங்கிலம்: bullet train, புல்லெட் இரயில்) எனும் அடைப்பெயரால் அழைக்கபடுகிறது.