செடிப்பேன்
தாவரப் பேன் 1-5 மி.மீ நீளமுள்ளது. பேரிக்காய் வடிவம். மெல்லுடல். நீண்ட கால்களும் உணரிகளும் உண்டு / From Wikipedia, the free encyclopedia
அசுவுணி அல்லது செடிப்பேன் (Aphid plant lice) என்பது செடி கொடிகளில் இலை, இலைக்குருத்து, மொக்கு, கிளை ஆகியவற்றில் கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து வாழும் பூச்சியாகும். இவற்றின் உடல் சிறியதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். இவை பச்சை, பழுப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். இவற்றில் 3600 -க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை செடி கொடிகளில் தங்கி அவற்றின் சாற்றை உறிஞ்சி உண்டு வாழ்கின்றன. இப்பூச்சிகள் காய்கறிகள் , பருத்தி, சோளம், கரும்பு, புகையிலை, ஆமணக்கு, பயறு போன்ற பயிர்களையே பெரிதும் தாக்கிப் பாழாக்குகின்றன. இவற்றால் சாறு உறிஞ்சப்பட்ட செடிகள் வலுழந்துவிடுகின்றன. அவை வெளிறிப்போய் சுருண்டுவிடுகின்றன. அசுவிணிகள் மூலம் நோய் பரப்பும் பூச்சிகள், நல்ல செடிகளுக்கும் பரவுகின்றன.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு ...
அசுவுணி Aphids புதைப்படிவ காலம்:Permian–Present | |
---|---|
Pea aphids, Acyrthosiphon pisum | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Hemiptera |
துணைவரிசை: | Sternorrhyncha |
பெருங்குடும்பம்: | Aphidoidea Latreille, 1802 |
மூடு