டுவிட்டர்
From Wikipedia, the free encyclopedia
எக்ஸ் (X) (பரவலாக அதன் முந்தைய பெயரான டுவிட்டர் என்று அறியப்படுகிறது) இது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு சமூக ஊடக வலைத்தளமாகும். 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு, இது உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல்களில் ஒன்றாகவும் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட வலைத்தளங்களில் ஐந்தாமிடத்திலும் உள்ளது.[8][9] பயனர்கள் குறுஞ்செய்திகள், ஒளிப்படம், நிகழ்படங்களை குறுகிய இடுகைகள் மூலம் தகவல்களைப் பகிரலாம் ("ட்வீட்" என்று அழைக்கப்படுகிறது).[10] நேரடிச் செய்தி அனுப்புதல், நிகழ்படம் மற்றும் ஒலி அழைப்பு, நூற்குறி, பட்டியல்கள் ஆகிய வசதிகள் இதில் உள்ளன.
நிறுவன_வகை | பொது |
---|---|
பங்கு வணிகத்தில் | நியாபச: TWTR |
நிறுவப்பட்ட நாள் | மார்ச்சு 21, 2006; 18 ஆண்டுகள் முன்னர் (2006-03-21)[1] |
தலைமையிடம் | சான் பிரான்சிற்கோ, கலிபோர்நியா, ஐக்கிய அமெரிக்கா[2] |
சேவை பகுதி | உலகம் முழுவதும் |
நிறுவனர்(கள்) | யாக்கு உடோர்சி நோவா கிளாசு பிசு தோன் இவான் வில்லியமிசு |
தொழில் | இணையம் |
வருமானம் | 2.21 பில்லியன் அமெரிக்க உடொலர் (2015) |
நிகர வருமானம் | -521 மில்லியன் ஐக்கிய அமெரிக்க உடொலர் (2015) |
உரிமையாளர் | எல்லான் மஸ்க் |
ஊழியர்கள் | 3,800 (மார்ச்சு 2016)[2] |
துணை நிறுவனங்கள் | வைன் பெரிசுக்கோப்பு |
வலைத்தளம் | twitter |
நிரல் மொழி | யாவா[3][4], உரூபி[3], காலா[3], யாவாக்கிறிட்டு[3] |
அலெக்சா தரவரிசை எண் | 8 (சூலை 2016[update])[5] |
வலைத்தள வகை | குமுக வலையமைப்புச் சேவை |
பதிகை | பதிவிடுவதற்கும் பின் தொடர்வதற்கும் பின் தொடரப்படுவதற்கும் தேவை |
பதிந்த பயனர்கள் | 550 மில்லியன்மாதத் தொடர் பங்களிப்பாளர்கள் (செப் 2023)[6] |
மொழிகள் | பன்மொழி |
துவக்கம் | சூலை 15, 2006 (2006-07-15)[7] |
தற்போதைய நிலை | இயங்குநிலை |
டுவிட்டர் இன்க் எனும் அமெரிக்க நிறுவனமான எக்ஸ் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இந்தச் சேவை மார்ச் 2006 இல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டு, அதே ஆண்டு சூலை மாதம் தொடங்கப்பட்டது. துவக்கத்தில் விரைவான வளர்ச்சியினைக் கண்டது, மேலும் 2012[update] ஆம் ஆண்டில், 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஒரு நாளைக்கு 340 மில்லியன் ட்வீட்களை பதிவிட்டனர்.[11] கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவினைத் தளமாகக் கொண்ட டுவிட்டர், உலகம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டிருந்தது.[12] இதன் முதன்மைப் பண்புக்கூறு, பதிவுகள் சுருக்கமாக இருக்க வேண்டும் (முதலில் 140 எழுத்துக்கள், பின்னர் 2017 இல் 280 ஆக விரிவுபடுத்தப்பட்டது) என்பதாகும். 2020 ஆம் ஆண்டில், சுமார் 48 மில்லியன் கணக்குகள் (அனைத்து கணக்குகளிலும் சுமார் 15%) போலிக் கணக்குகள் என்று மதிப்பிடப்பட்டது.[13]