தாவர புறஅமைப்பியல்
From Wikipedia, the free encyclopedia
தாவர புறஅமைப்பியல் என்பது தாவரங்களின் வடிவம் மற்றும் புறத்தோற்ற அமைப்பை பற்றி அறியும் ஆய்வுப்பிரிவாகும்.[1] இது தாவர உள்ளமைப்பியலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். தாவர உள்ளமைப்பியல் என்பது தாவரப்பகுதிகளை வெட்டி அவற்றின் உள்ளமைப்பை நுண்ணோக்கி மூலம் நுண்ணிய அளவில் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்து அறிந்து கொள்ள உதவும் ஆய்வுப்பிரிவாகும்.[2] ஆனால் தாவர புறஅமைப்பியல் என்பது கண்ணில் காணக்கூடிய தாவர வடிவம் மற்றும் புறப்பண்புகளின் அடிப்படையில் அடையாளம் காணக்கூடிய பிரிவாகும்.