திராங்கானு சுல்தான்
திராங்கானு மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
திராங்கானு சுல்தான் (மலாய்: Sultan Terengganu; ஆங்கிலம்: Sultan of Terengganu ஜாவி: سلطان ترڠڬانو) என்பவர் திராங்கானு மாநிலத்தின் ஆளும் அரசராகவும், திராங்கானு மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் மாநிலத் தலைவராகவும் பொறுப்புகள் வகிக்கும் தலைமை அரச ஆளுநராகும். அத்துடன், திராங்கானு சுல்தான் என்பவர் திராங்கானு மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவரும் ஆவார்.
திராங்கானு சுல்தான் Sultan of Terengganu Sultan Terengganu Darul Imam سلطان ترڠݢانو | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
திராங்கானு அரசு சின்னம் | |||||||||
ஆட்சிக்காலம் | திராங்கானு சுல்தான் பதவியில்: 15 மே 1998 - தற்போது வரையில் | ||||||||
பிரதிநிதி ஆட்சி | 8 அக்டோபர் 2001 - 12 டிசம்பர் 2001 | ||||||||
திராங்கானு சுல்தான் | |||||||||
ஆட்சிக்காலம் | 15 மே 1998 - தற்போது வரையில் | ||||||||
முடிசூட்டுதல் | 4 மார்ச் 1999 | ||||||||
முன்னையவர் | திராங்கானு சுல்தான் மகமூட் | ||||||||
முதலமைச்சர்கள் | பட்டியல்
| ||||||||
பிறப்பு | 22 சனவரி 1962 (1962-01-22) (அகவை 62) இசுதானா அல்-முக்தாபி, கோலா திராங்கானு, மலேசியா | ||||||||
| |||||||||
மரபு | பெண்டகாரா வம்சாவளி | ||||||||
தந்தை | திராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன் | ||||||||
தாய் | சரிபா நோங் பாத்திமா | ||||||||
மதம் | இசுலாம் |
தற்போதைய திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன், திராங்கானு சுல்தானகத்தின் 18-ஆவது சுல்தானாகப் பதவி வகிக்கிறார்.
மிசான் சைனல் ஆபிதீன், 2006-ஆம் ஆண்டு தொடங்கி 2011-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் 13-ஆவது பேரரசராக ஆட்சிப் பீடத்தில் இருந்தவர். திராங்கானு மாநிலத்தின் இசுலாமிய மதத்தின் தலைவர்; மற்றும் திராங்கானு மாநிலத்தின் அனைத்து விருதுகளுக்குள், மரியாதைகளுக்கும் தலைவராகவும் விளங்குகின்றார்.
திராங்கானு சுல்தானகம் (மலாய்: Kesultanan Terengganu; ஆங்கிலம்: Sultanate of Terengganu ஜாவி: سلطنة ترينجانو) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில் 1725-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட ஒரு சுல்தானகம் ஆகும்.