துவா
ரஷ்ய கூட்டமைப்பை ஒப்பனை குடியரசுகள் / From Wikipedia, the free encyclopedia
துவா குடியரசு (Tyva Republic ரஷியன் : Республика Тыва, Tr. Respublika Tyva; [rʲɪspublʲɪkə tɨva] ; துவன் : Тыва Республика, Tyva Respublika, [təvɑ rispublikɑ] ), Tyva அல்லது துவா ( Tuvan : Тыва, ரஷியன் : Тува), என்பது ரஷ்ய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு உட் குடியரசு ( ஒரு அரசாக ரஷியன் கூட்டமைப்பு அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டது,)[12] இது நிலவியல் அமைப்பின்படி மத்திய ஆசியாவிலும், தெற்கு, சைபீரியா பகுதியிலும் அமைந்துள்ளது. இது தன் எல்லைகளை இரஷ்ய குடியரசின் அல்த்தாய் குடியரசு , ஹக்காசியா குடியரசு , க்ராஸ்நாயர்ஸ்க் பிரதேசம் , இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து , மற்றும் புரியாத்தியா குடியரசு ஆகியவற்றுடனும், தெற்குப் பகுதியில் மங்கோலியாவுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதன் தலைநகரம் கைஸ்வல் ( Kyzyl ) ஆகும். மக்கள் தொகை: 307,930 ( 2010 கணக்கெடுப்பின்படி ).[7] 1921 முதல் 1944 வரை டன்னு துவா என்ற பெயரில், ஒரு இறையாண்மை மிக்க சுதந்திர நாடாக இருந்தது. அதிகாரப்பூர்வமாக துவா மக்கள் குடியரசு என்ற பெயர். இதை இதன் அண்டை நாடுகளான சோவியத் ஒன்றியம் மற்றும் மங்கோலியா ஆகியன மட்டும் அங்கீகரித்து இருந்தன .[13] இதன் புவியியலில் காடுகள், மலைகள், புல்வெளிகள் பெரிய அளவில் இடம்பெற்றவை. பெரும்பாலான மக்கள் துவான் இனத்தவர் என்றாலும், இரஷ்ய மொழி பரவலாக பேசப்படுகிறது. துவாவின் ஆட்சியாளர் கிரேட் குரல் எனப்படுவார். இவரின் ஆட்சிக்காலம் நான்கு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். தற்போதைய தலைவர் ஆவார் சோல்பான் காரா-ஊல் ஆவார்.
துவா குடியரசு Tyva Republic | |
---|---|
குடியரசு | |
Республика Тыва | |
Other transcription(s) | |
• Tyvan | Тыва Республика |
பண்: Men – Tyva Men | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | சைபீரிய கூட்டமைப்பு மாவட்டம்[1] |
பொருளாதாரப் பகுதி | கிழக்கு சைபீரியா[2] |
தலை நகரம் | கைசல் |
அரசு | |
• நிர்வாகம் | Great Khural[3] |
• Chairman of the Government[4] | ஷோல்பன் கரா-ஓல்[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,70,500 km2 (65,800 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 21st |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 3,07,930 |
• மதிப்பீடு (2018)[8] | 3,21,722 (+4.5%) |
• தரவரிசை | 77th |
• அடர்த்தி | 1.8/km2 (4.7/sq mi) |
• நகர்ப்புறம் | 53.1% |
• நாட்டுப்புறம் | 46.9% |
நேர வலயம் | ஒசநே+7 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-TY |
அனுமதி இலக்கத்தகடு | 17 |
OKTMO ஐடி | 93000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்;[10] துவன் மொழி[11] |
இணையதளம் | http://gov.tuva.ru/ |