தென்காக்கேசியா
From Wikipedia, the free encyclopedia
தென்காக்கேசியா (South Caucasus; Transcaucasia அல்லது Transcaucasus) என்ற புவியியல் பகுதியானது, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா நிலப்பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் தெற்குப் பகுதியில் காக்கசஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது.[1][2] இப்பகுதி தோராயமாக, தற்போதுள்ள ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகியனவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே, இந்நாடுகளை, சில நேரங்களில், காக்கேசிய நாடுகள்(Caucasian States) என அழைப்பர். இம்மூன்று நாடுகளின் பரப்பளவு 186,100 சதுர கிலோமீட்டர்கள் (71,850 சதுர மைல்கள்) ஆகும்.[3] வடக்கு காக்கேசியாவும், தெற்கு காக்கேசியாவும் இணைந்து பெரிய காக்கேசியா என்ற புவியியல் பகுதியாக அமைந்து, ஐரோவாசியாவினைப் பிரிக்கிறது.
விரைவான உண்மைகள் தென்காக்கேசியா, Coordinates ...
தென்காக்கேசியா | |
---|---|
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசுத்துறை, 1994இல் அளித்த இந்நிலப்படம் | |
Coordinates | 42°15′40″N 44°07′16″E |
நாடுகள் | |
நேர வலயம் | UTC+04:00, ஒசநே+03:30, ஒசநே+03:00 |
அதிக உயரமுள்ள மலையுச்சி | Shkhara (5,203 மீட்டர்கள் (17,070 அடி)) |
மூடு