தோக்கியோ இசுக்கைட்றீ
From Wikipedia, the free encyclopedia
தோக்கியோ இசுக்கைட்றீ (Tokyo Skytree (東京スカイツリー, டோக்யோ சுக்கைட்சுரி?) என்பது சப்பான், டோக்கியோ நகரில் உள்ள ஒலிபரப்பு, உணவகம், மற்றும் காட்சிக் கோபுரம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டில் சப்பானின் மிக உயரமான கோபுரமாகக் கட்டப்பட்டு,[3] 2011 மார்ச்சில் கன்டோன் கோபுரத்தின் உயரத்தைத் தாண்டி அடைந்து, அதன் முழு உயரமான 634.0 மீட்டரை அடைந்து உலகின் மிக உயரமாக கோபுரம் என்ற பெயரைப் பெற்றது.[4][5] இது புர்ஜ் கலிஃபாவிற்கு (829.8 மீட்டர்) அடுத்தபடியாக உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் ஆகும்.[6]
டோக்கியோ இசுக்கைட்றீ Tokyo Skytree | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முடிவடைந்தது |
வகை | தொலைத்தொடர்பு, உணவகம், காட்சிக் கோபுரம் |
கட்டிடக்கலை பாணி | புதுமையான-வருங்காலம் |
இடம் | சுமிதா, தோக்கியோ, சப்பான் |
ஆள்கூற்று | 35.7101°N 139.8107°E / 35.7101; 139.8107 |
கட்டுமான ஆரம்பம் | 14 சூலை 2008 (2008-07-14) |
நிறைவுற்றது | 29 பெப்ரவரி 2012 (2012-02-29) |
திறப்பு | 22 மே 2012 (2012-05-22) |
செலவு | 65 பில். யென்[1] |
உரிமையாளர் | டோபு ரெயில்வே |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 634 மீ |
கூரை | 495 மீ |
மேல் தளம் | 451.2 மீ |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 32 (தரை மட்டத்தில் இருந்து[2] 3 தரைக்குக் கீழ்[2] |
உயர்த்திகள் | 13 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | நிக்கென் செக்கெய் |
மேம்பாட்டாளர் | டோபு ரெயில்வே |
முதன்மை ஒப்பந்தகாரர் | ஒபயாசி கார்ப்பரேசன் |
வலைதளம் | |
www |
இந்தக் கோபுரம் கான்டோ பிராந்தியத்திற்கான முதன்மைத் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளமாகும்; பழைய தோக்கியோ கோபுரம் உயரமான கட்டிடங்களால் சூழப்பட்டுள்ளதால், முழுமையான எண்ணிமத் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை வழங்க முடியாமல் இருந்தது. 2012 பெப்ரவரி 29 ஸ்கைட்ரீ கட்டி முடிக்கப்பட்டது, 2012 மே 22 அன்று கோபுரம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.[7]