நோபல் பரிசு அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
நோபல் பரிசு அருங்காட்சியகம் (Nobel Prize Museum)(முன்னர் நோபல் அருங்காட்சியகம் [Swedish: Nobelmuseet]) சுவீடனின் மத்திய ஸ்டாக்ஹோமில் உள்ள பழைய நகரமான கம்லா ஸ்டானில் உள்ள ஸ்டோர்டோர்ஜெட்டின் சதுக்கத்தின் வட பகுதியில் உள்ள முன்னாள் பங்குச் சந்தை கட்டடத்தில் (பார்ஷூசெட்) அமைந்துள்ளது. ஸ்வீடிஷ் அகாடமி மற்றும் நோபல் நூலகமும் இந்த கட்டடத்தில்தான் அமைந்துள்ளன. நோபல் பரிசு அருங்காட்சியகம் நோபல் பரிசு மற்றும் நோபல் பரிசு வென்றவர்கள் பற்றிய தகவல்களையும், பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபல் (1833–1896) பற்றிய தகவல்களையும் காட்சிப்படுத்துகிறது. அருங்காட்சியகத்தின் நிரந்தர காட்சியில் நோபல் பரிசு பெற்றவர்கள் நன்கொடையாக வழங்கிய பல கலைப்பொருட்கள், தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [1]
விரைவான உண்மைகள் முன்னாள் பெயர், நிறுவப்பட்டது ...
2019-ல் அருங்காட்சியகம் | |
முன்னாள் பெயர் | நோபல் அருங்காட்சியகம் |
---|---|
நிறுவப்பட்டது | 2001 (2001) |
அமைவிடம் | ஸ்டாக்ஹோம் பங்குச் சந்தை கட்டடம், ஸ்டோர்ட்கெட், கேம்லா ஸ்டான், ஸ்டாக்ஹோம், சுவீடன் |
ஆள்கூற்று | 59°19′28.70″N 18°04′17.13″E |
வகை | இயற்கை அறிவியல் & பண்பாடு |
தலைமை நிர்வாக அதிகாரி | எரிகா லேனனெர் |
உரிமையாளர் | நோபல் நிறுவனம் |
வலைத்தளம் | Nobel Prize Museum |
மூடு