பார்மால்டிகைடு
From Wikipedia, the free encyclopedia
பார்மால்டிகைடு (Formaldehyde) என்பது CH2O (H−CHO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இயற்கையில் கிடைக்கும் இக்கரிமச் சேர்மம் ஓர் எளிய ஆல்டிகைடுக்கு எடுத்துக்காட்டு ஆகும். பார்மிக்காடியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் பார்மால்டிகைடு என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பார்மால்டிகைடு[1] | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
மெத்தனல்[1] | |||
வேறு பெயர்கள்
மெத்தில் ஆல்டிகைடு மெத்திலீன் கிளைக்கால் (நீரிய கரைசலில் டையால் உருவாகிறது) மெத்திலீன் ஆக்சைடு பார்மலின் (நீரிய கரைசல்) பார்மால் கார்பனைல் ஐதரைடு | |||
இனங்காட்டிகள் | |||
50-00-0 Y | |||
3DMet | B00018 | ||
Beilstein Reference |
1209228 | ||
ChEBI | CHEBI:16842 Y | ||
ChEMBL | ChEMBL1255 Y | ||
ChemSpider | 692 Y | ||
DrugBank | DB03843 Y | ||
EC number | 200-001-8 | ||
Gmelin Reference |
445 | ||
IUPHAR/BPS |
4196 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00017 Y | ||
ம.பா.த | பார்மால்டிகைடு | ||
பப்கெம் | 712 | ||
வே.ந.வி.ப எண் | LP8925000 | ||
| |||
UNII | 1HG84L3525 Y | ||
UN number | 2209 | ||
பண்புகள் | |||
CH2O | |||
வாய்ப்பாட்டு எடை | 30.03 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
அடர்த்தி | 0.8153 கி/செ.மீ3 (−20 °செல்சியசு)[2] | ||
உருகுநிலை | −92 °C (−134 °F; 181 K) | ||
கொதிநிலை | −19 °C (−2 °F; 254 K)[2] | ||
400 கி/லிட்டர் | |||
மட. P | 0.350 | ||
ஆவியமுக்கம் | < 1 வளிமண்டல அழுத்தம்[3] | ||
காடித்தன்மை எண் (pKa) | 13.27 (நீரேற்று) [4][5] | ||
−18.6·10−6 செ.மீ3/மோல் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.330 D[6] | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS(Archived) | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H301, H311, H331, H314, H317, H335, H336, H341, H350, H370 | |||
P201, P280, P303+361+353, P304+340, P309+311, P305+351+338 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 64 °C (147 °F; 337 K) | ||
Autoignition temperature |
430 °C (806 °F; 703 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 7–73% | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
100 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[7] | ||
LC50 (Median concentration) |
மில்லியனுக்கு 333 பகுதிகள் (சுண்டெலி, 2 h) மில்லியனுக்கு 815 பகுதிகள் (எலி, 30 நிமிடம்)[8] | ||
LCLo (Lowest published) |
மில்லியனுக்கு 333 பகுதிகள் (எலி, 2 h)[8] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA மில்லியனுக்கு 0.75 பகுதிகள் ST மில்லியனுக்கு 2 பகுதிகள் (பார்மால்டிகைடாகவும் பார்மலினாகவும்)[9][10] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
Ca TWA மில்லியனுக்கு 0.016 பகுதிகள் C மில்லியனுக்கு 0.1 பகுதிகள் [15-நிமிடம்][9] | ||
உடனடி அபாயம் |
Ca [மில்லியனுக்கு 20 பகுதிகள்][9] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பல்வேறு வேதிச் சேர்மங்களின் தயாரிப்புக்கு பார்மால்டிகைடு ஒரு முன்னோடிச் சேர்மமாக உள்ளது. 1996 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்டுக்கு 8.7 மில்லியன் டன் பார்மால்டிகைடு உற்பத்தி செய்யப்பட்டது [11]. குறைந்த அடர்த்தி மரப்பலகை மற்றும் வண்ணப்பூச்சுகளுக்கான தொழிற்சாலை பிசின்கள் தயரிப்பில் பார்மால்டிகைடு முக்கியமாகப் பயன்படுகிறது.
பரவலாகப் பயன்பாட்டில் உள்ளதால் இதன் நச்சுத்தன்மையும் எளிதில் ஆவியாகும் தன்மையும் மனித உடல் நலத்திற்கு குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது [12][13]. பார்மால்டிகைடு சேர்மத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் தேசிய நச்சுயியல் அமைப்பு 2011 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது [14][15][16].