பீட்டர் ஹிக்ஸ்
பிரித்தானிய இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
பீட்டர் வேர் ஹிக்ஸ் (Peter Ware Higgs, 29 மே 1929 – 8 ஏப்பிரல் 2024) ஒரு பிரித்தானியக் கோட்பாட்டு இயற்பியலாளரும், எடின்பரோ பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.[3][4] அணுவடித்துகள்களின் திணிவு பற்றிய இவரது ஆக்கங்களுக்காக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5][6]
பீட்டர் ஹிக்சு | |
---|---|
2013 இல் இக்சு | |
பிறப்பு | பீட்டர் வேர் ஹிக்ஸ் (1929-05-29)29 மே 1929 டைன் ஆற்றங்கரை நியூ காசில், இங்கிலாந்து |
இறப்பு | 8 ஏப்ரல் 2024(2024-04-08) (அகவை 94) எடின்பரோ, இசுக்காட்லாந்து |
தேசியம் | பிரித்தானியர்[1] |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் இலண்டன் இம்பீரியல் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | கிங்ஸ் கல்லூரி, லண்டன் |
ஆய்வேடு | (1955) |
ஆய்வு நெறியாளர் | சார்லசு கூல்சன்[2] |
முனைவர் பட்ட மாணவர்கள் | கிறித்தோபர் பிசொப் லூயிசு ரைடர் டேவிட் வாலசு[2] |
அறியப்படுவது | வலுவற்ற மின் தத்துவத்தில் முறிந்த சமச்சீர்மை ஹிக்ஸ் போசான் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (2013) இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004) சகுராய் பரிசு (2010) டிராக் பதக்கம் |
இணையதளம் www |
1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக அடிப்படைத் துகள்களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், திணிவு எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். இவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த ஹிக்ஸ் செயல்பாடு ஹிக்ஸ் போசான் என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக கருதப்படுகிறது.[7][8] 2012 சூலை 4 அன்று, ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் பெரிய ஆட்ரான் மோதுவியில் போசான் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது.[9] இக்சு பொறிமுறை பொதுவாக துகள் இயற்பியலின் சீர்மரபு ஒப்புருவில் ஒரு முக்கிய மூலப்பொருளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, இது இல்லாமல் சில துகள்களுக்கு பொருண்மை இருக்காது.[10]