புனித பேட்ரிக்கின் நாள்
From Wikipedia, the free encyclopedia
புனித பேட்ரிக்கின் நாள் (Saint Patrick's Day) அல்லது புனித பேட்ரிக்கின் விழா (Feast of Saint Patrick, ஐரிய மொழி: Lá Fhéile Pádraig) என்பது ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று கொண்டாடப்படும் கத்தோலிக்க சமய மற்றும் கலாச்சார விடுமுறை நாள் ஆகும். அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் (அண். கிபி 385–461) இறப்பை நினைவு கூரவும், அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவுகூரவும்[3] ஐரிய மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சிறப்பிக்கவும்[4] இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
புனித பேட்ரிக்கின் நாள் | |
---|---|
புனித பேட்ரிக்கின் உருவம் பொறிக்கப்பட்ட ஆலய கண்ணாடி, புனித பெனின் ஆலயம், அயர்லாந்து | |
அதிகாரப்பூர்வ பெயர் | புனித பேட்ரிக்கின் நாள் |
பிற பெயர்(கள்) | புனித பேட்ரிக்கின் விழா பேட்ரிக்கின் நாள்[1][2] |
கடைபிடிப்போர் | ஐரிய மக்கள் மற்றும் ஐரிய பூர்வீகம் உடையோர், கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் |
வகை | கிறித்தவம், கலாச்சாரம், நாடு சார் |
முக்கியத்துவம் | புனித பேட்ரிக்கின் விழா, அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவகூர[3] |
கொண்டாட்டங்கள் | பேரணிகள், பச்சை நிற உடையணிதல், ஐரிய பியர் அல்லது விஸ்கி அருந்துவது |
அனுசரிப்புகள் | திருப்பலி அல்லது பிற வழிபாடுகள் |
நாள் | 17 மார்ச் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
புனித பேட்ரிக்கின் நாள் ஒரு கிறித்தவ விழா நாளாக 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொண்டாடப்பட்டது. இது தற்போது கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் (குறிப்பாக அயர்லாந்து திருச்சபை),[5] கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் லூதரனியம் ஆகிய சபைகளில் கொண்டாடப்படுகின்றது.
இந்நாளில் பொதுவாக பேரணியில் செல்வது, ஐரிய மக்களின் மரபு இசை, நடனம், பச்சை நிற உடைகள் அணிவது வழக்கமாகும்.[6] கிறித்தவர்கள் ஆலய வழிபாட்டில் பங்கேற்பர்.[4][7] இவ்விழா பொதுவாக தவக் காலத்தில் நிகழ்வதாலும், இவ்விழாவன்று நோன்புக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாலும் இந்த நாள் மது அருந்துவதோடு அதிகம் தொடர்புபடுத்தப்பட்டது.[4][6][8][9]
அயர்லாந்து குடியரசு,[10] வட அயர்லாந்து,[11] நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மற்றும் மொன்செராட் ஆகிய இடங்களில் இது பொது விடுமுறை நாளாகும். அயர்லாந்து மக்கள் அதிகம் வசிக்கும் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, அர்கெந்தீனா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் இது பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.