மனுக்கா நீள்வட்ட அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
மனுக்கா ஓவல் அல்லது மனுக்கா நீள்வட்ட அரங்கம் (Manuka Oval) ஆத்திரேலியத் தலைநகர் கான்பராவின் வணிக மாவட்டமான மனுக்காவை அடுத்த கிரிஃபித் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். ஆத்திரேலியக் காற்பந்தாடப் போட்டிகளின்போது புரவலர் காரணங்களுக்காக இசுடார்டிராக் ஓவல் கான்பரா என அழைக்கப்படுகின்றது.[1] இந்த அரங்கத்தின் கொள்ளளவு 13,550 பேர் ஆகும்;[2] இருப்பினும் சில நேரங்களில் இதைவிடக் கூடுதலானவர்கள் காணலாம்.[3][4]
விரைவான உண்மைகள் மனுக்கா ஓவல், இடம் ...
மனுக்கா ஓவல் | |
---|---|
மென்சீசு, பிராட்மன், ஹாக் அமர்மேடைகள் (இடதிலிருந்து வலதாக) | |
இடம் | கிரிஃபித், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் |
அமைவு | 35°19′5″S 149°08′5″E |
எழும்பச்செயல் ஆரம்பம் | 1926 |
எழும்புச்செயல் முடிவு | 1929 |
திறவு | 1929 (சூழப்பட்டது) |
உரிமையாளர் | ஆத்திரேலியத் தலைநகர ஆட்புல அரசு |
ஆளுனர் | டெர்ரிடரி வெனியூசு அண்டு இவென்ட்சு |
தரை | புற்றரை |
முன்னாள் பெயர்(கள்) | மனுக்கா வட்டப் பூங்கா (சூழப்படுவதற்கு முன்பாக) |
குத்தகை அணி(கள்) | கிரேட்டர் வெஸ்டர்ன் சிட்னி ஜெயன்ட்ஸ், (ஆத்திரேலிய காற்பந்து கூட்டிணைவு) கான்பரா காமெட்சு, (ஃபியூட்ச்சர்சு லீக்) ஈஸ்ட்லேக் டெமன்சு, (வடகிழக்கு ஆத்திரேலிய காற்பந்துக் கூட்டிணைவு) ஆ.த.ஆ மெடியர்சு, (மகளிர் தேசிய துடுப்பாட்டக் கூட்டிணைவு) |
அமரக்கூடிய பேர் | 13,550 |
பரப்பளவு | 179 x 150 மீ |
மூடு
இந்த அரங்கத்தில் கோடைக்காலத்தில் துடுப்பாட்ட விளையாட்டுக்களும் குளிர்காலத்தில் ஆத்திரேலிய காற்பந்தாட்ட போட்டிகளும் ஆடப்படுகின்றன.