மன நலம்
From Wikipedia, the free encyclopedia
மன ஆரோக்கியம் என்பது உளவியல் நல்வாழ்வின் நிலையையும், மன நோய் இல்லாத நிலையையும் குறிக்கிறது. இது ஒருவரின் உள நிலையானது, அவரது உணர்ச்சி, நடத்தை என்ற நிலைகளைச் சார்ந்து, திருப்திகரமான மட்டத்தில், சமன்நிலையில் செயற்படுவதைக் குறிக்கிறது. " [1] உளச்சுகாதாரம் சிக்கலுடையது. இதனுடைய பொருளையும் செயலையும் பற்றிக் கருத்து வேறுபாடுகள், உளவியல் அறிஞர்களிடையே நிலவுகிறது. ஆரோக்கியமான உள்ள நலத்தைப் பெறுவதற்குத் தடையாக, மூளைத்திசுநோய்களும், ஆளுமை வளர்ச்சியைத் தடுக்கும் காரணங்களும் உள்ளன. மேலும், வேறு சில கராணிகளும் உள நலத்திற்குத் தடைகளாக அமைகின்றன.