மயோன் எரிமலை
பிலிப்பைன்சு நாட்டிலுள்ள ஒரு எரிமலை / From Wikipedia, the free encyclopedia
மயோன் எரிமலை (Mayon Volcano, தகலாகு: மொழியில் புல்காங்கு மயோன்) அல்லது புல்கான் மயோன் அல்லது மயோன் சிகரம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இது உயிர்த்துடிப்புடைய எரிமலை ஆகும். இது பிலிப்பைன்சு நாட்டின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ளது. இது "முழுமையான கூம்பு" எனப் புகழ்பெற்ற எரிமலையாகும். ஏனெனில் அது கிட்டத்தட்ட சமச்சீரான கூம்பு வடிவத்தில் உள்ளது. இந்த மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஜூலை 20, 1938 இல், நாட்டின் முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் மயோன் எரிமலை இயற்கைப் பூங்கா என வகைப்பாடு செய்யப்பட்டு மயோன் எரிமலை தேசியப் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]
விரைவான உண்மைகள் மயோன் எரிமலை, உயர்ந்த இடம் ...
மயோன் எரிமலை | |
---|---|
புல்காங்கு மயோன் | |
லிங்னான் மலையிலிருந்து மயோன் எரிமலையின் தோற்றம், திசம்பர் 2006 | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 2,463 m (8,081 அடி)[1] |
இடவியல் புடைப்பு | 2,447 m (8,028 அடி)[1] |
பட்டியல்கள் | அசாதாரண |
புவியியல் | |
அமைவிடம் | பிலிப்பீன்சு |
நிலவியல் | |
பாறையின் வயது | 20 மில்லியன் வருடங்களுக்கு மேல் |
மலையின் வகை | சுழல் எரிமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | ஸ்கொட்ஸ்மன் பட்டன், ஸ்ரிவாட் (1858)[2] |
மூடு
உள்ளூர் நாட்டுப்புறவியல் தகவலின்படி, தாராகாங் மகயோன் என்ற புகழ்பெற்ற நடிகையின் பெயரே இந்த எரிமலைக்கு வைக்கப்பட்டுள்ளது.[4]