மலேசியப் பொதுத் தேர்தல், 1974
From Wikipedia, the free encyclopedia
மலேசியப் பொதுத் தேர்தல், 1974 (ஆங்கிலம்: 1974 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1974) என்பது 1974 ஆகஸ்டு மாதம் 24-ஆம் திகதி தொடங்கி 1974 செப்டம்பர் மாதம் 14-ஆம் திகதி வரையில், மலேசியாவில் நடைபெற்ற 4-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 154 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.
| |||||||||||||||||||||||||||||||||||||||||
மலேசிய மக்களவையின் 154 இடங்கள் அதிகபட்சமாக 78 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 4,017,266 | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 75.00% | ||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
தொகுதி வாரியாக முடிவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 360 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா மாநிலத்தில் மட்டும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.
இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 154 இடங்களில் 135 இடங்களை வென்றது. பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 60.81%.[1]