மலேசிய பாதுகாப்பு படைகள்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய பாதுகாப்பு படைகள் ஆங்கிலம்: Malaysian Armed Forces (MAF); மலாய்: Angkatan Tentera Malaysia), மலேசியாவின் பாதுகாப்பு படைகள் ஆகும். மலேசிய பாதுகாப்பு படைகள், மூன்று தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன.
- மலேசிய தரைப்படை ஆங்கிலம்: Malaysian Army; மலாய்: Tentera Darat Malaysia (TDM)
- அரச மலேசிய கடற்படை ஆங்கிலம்: Royal Malaysian Navy (RMN); மலாய்: Tentera Laut Diraja Malaysia (TLDM)
- அரச மலேசிய வான்படை ஆங்கிலம்: Royal Malaysian Air Force (RMAF); மலாய்: Tentera Udara Diraja Malaysia (TUDM)
விரைவான உண்மைகள் மலேசிய பாதுகாப்பு படைகள் Malaysian Armed Forces, நிறுவப்பட்டது ...
மலேசிய பாதுகாப்பு படைகள் Malaysian Armed Forces | |
---|---|
Angkatan Tentera Malaysia | |
ஆயுதப்படைகளின் சின்னம் | |
மலேசிய இராணுவக் கொடி | |
நிறுவப்பட்டது | 1 மார்ச்சு 1933; 91 ஆண்டுகள் முன்னர் (1933-03-01) |
சேவை கிளைகள் | மலேசிய தரைப்படை மலேசிய கடற்படை மலேசிய வான்படை |
தலைமைத்துவம் | |
தலைமைத் தளபதி | மலேசிய மாமன்னர், சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் |
பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
அமைச்சர் | முகமட் காலிட் நோர்டின் |
ஆட்பலம் | |
படைச்சேவை வயது | 18 வயது |
இராணுவ சேவைக்கு தயாரான நபர்கள் | 15,919,573, வயது 16-49 (2023 est.) |
படைச்சேவைக்கு ஏற்றவர் | 13,209,858, வயது 16-49 (2023 est.) |
ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் | 541,943 (2023 est.) |
பணியிலிருப்போர் | 113,000[1][2] |
இருப்புப் பணியாளர் | 51,600 |
செலவுகள் | |
நிதியறிக்கை | RM19.7 பில்லியன் (US$4.37 பில்லியன்) (FY2024)[3] |
மொ.உ.உ இன் சதவீதம் | 18% (2023) |
மூடு
மலேசிய இராணுவத்தில் மலேசிய தரைப்படை மட்டும் ‘அரச’ என்ற பட்டத்தைப் பெறவில்லை. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைகள் மற்றும் படைப்பிரிவுகளுக்கு ‘அரச’ பட்டம் வழங்கப்படுகிறது. மற்ற மலேசியக் கடற்படை; மலேசிய வான்படை ஆகிய இரு படைகளும் ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன.