மார்டி கிறாஸ்
From Wikipedia, the free encyclopedia
மார்டி கிறாஸ் (Mardi Gras) எனப்படுவது திருநீற்றுப் புதனுக்கு முந்திய நாள் ஒரு கேளிக்கைப் பண்டிகை ஆகும். இந்த பிரான்சியச் சொல்லை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "பட் டியூஸ்டே" (Fat Tuesday) என ஆகும். அதாவது "பருத்த செவ்வாய்". இத்திருவிழா "மூன்று அரசர்கள் தினம்" அன்று ஆரம்பித்து திருநீற்றுப் புதனுக்கு முந்தைய தினம் முடிவடையும். இத்திருவிழாவை உண்ணா நோன்பு ஆரம்பிப்பதற்கு முன் அறுசுவை உணவு அருந்தி கொண்டாடுகின்றனர். இத்திருவிழாவில் தாங்கள் செய்த பாவங்கள் குறித்து பாவ மன்னிப்பு கேட்டும் பிரார்த்தனை செய்கின்றனர். இத்திருவிழாவில் கொண்டாட்டங்களைத் தவிர முக்கியமானவையாக கருதப்படுபவை; உண்ணா நோன்பு, மதம் சார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் செய்த தவறுகள் குறித்து வருந்துதல் என்பனவாகும்.
விரைவான உண்மைகள் மார்டி கிறாஸ், பிற பெயர்(கள்) ...
மார்டி கிறாஸ் | |
---|---|
பிற பெயர்(கள்) | பருத்த செவ்வாய், மன்னிக்கப்பட்ட செவ்வாய் |
வகை | கிறித்தவம், கலாச்சாரம் |
முக்கியத்துவம் | தவக் கால நோன்புக்கு முந்திய கொண்டாட்டம் |
கொண்டாட்டங்கள் | ஊர்வலம், விருந்து |
நாள் | திருநீற்றுப் புதனுக்கு முந்திய நாள், உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் 47 நாட்கள் |
2024 இல் நாள் | பெப்பிரவரி 13 |
2025 இல் நாள் | மார்ச்சு 4 |
2026 இல் நாள் | பெப்பிரவரி 17 |
நிகழ்வு | வருடா வருடம் |
தொடர்புடையன | மன்னிக்கப்பட்ட செவ்வாய்; கேளிக்கை, மன்னிக்கப்பட்ட திங்கள், திருநீற்றுப் புதன், தவக் காலம், Užgavėnės, Maslenitsa, வேலன்டைன் நாள் |
மூடு