யூரி ககாரின்
From Wikipedia, the free encyclopedia
யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.
விரைவான உண்மைகள் யூரி ககாரின்Yuri Gagarin Юрий Гагарин, விண்வெளி வீரர் ...
யூரி ககாரின் Yuri Gagarin Юрий Гагарин | |
---|---|
விண்வெளி வீரர் | |
தேசியம் | உருசியர் |
பிறப்பு | (1934-03-09)மார்ச்சு 9, 1934 குளூசினோ, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | மார்ச்சு 27, 1968(1968-03-27) (அகவை 34) கிர்சாக், சோவியத் ஒன்றியம் |
வேறு தொழில் | விமானி |
படிநிலை | பல்கோவ்னிக், சோவியத் வான்படை |
விண்பயண நேரம் | 1 மணி, 48 நிமி |
தெரிவு | வான்படை குழு 1 |
பயணங்கள் | வஸ்தோக் 1 |
மூடு