ரோசிதுகள்
From Wikipedia, the free encyclopedia
ரோசிதுகள் (தாவர வகைப்பாட்டியல்:Rosids)[1] என்பவை பூக்கும் தாவரங்கள் வகையிலுள்ள ஒரு பெரிய உயிரினக் கிளையின் (ஒற்றை மரபுவரிசை) உறுப்பினர்களைக் குறிக்கிறது. பூக்கும் தாவர வகையில் நான்கில் ஒரு பாகத்திற்கு மேல் சுமார் 70,000 தாவர இனங்கள் [2] இவ்வுயிரினக் கிளையில் இடம்பெற்றுள்ளன.
ரோசிதுகள் புதைப்படிவ காலம்:Aptian or Albian–Recent | |
---|---|
பல ரோசித்துத் தாவரங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | Superrosids |
உயிரிக்கிளை: | ரோசிதுகள் |
வரிசைகள் | |
|
உயிரின வகைபாடு மற்றும் சூழலின் அடிப்படையைப் பொறுத்து ஒற்றை மரபுவரிசைத் தாவரங்கள் 16 முதல் 20 வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிசைகளில் மொத்தமாக 140 குடும்பங்களைச் சேர்ந்த தாவரங்கள் காணப்படுகின்றன.
கிரீத்தேசியக் காலம் முதலாக ரோசித் புதைப்படிவுகள் அறியப்படுகின்றன. 99.6 மற்றும் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரீத்தேசிய நிலவியல் காலப் பகுதியின் அப்டியன் அல்லது அல்பியன் நிலவியல் நிலைகளில் ரோசித் வகை தாவரங்கள் தோன்றியிருக்கலாம் என்று மூலக்கூற்று கடிகை தொழில்நுட்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.