லாப்ரடார் கடல்
கடல் / From Wikipedia, the free encyclopedia
லாப்ரடார் கடல் (The Labrador Sea) (French: mer du Labrador, Danish: Labradorhavet) வடக்கு அத்திலாந்திக்கு பெருங்கடலின் கரம் போன்று அமைந்துள்ள கடலாகும். இது லாப்ரடோர் மூவலந்தீவிற்கும், கிறீன்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தக் கடலானது கண்டத் திட்டுகளால் தென்மேற்கு, வடமேற்கு, மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் மடிப்புகளுடையதாய் இருக்கிறது. இது வடபகுதியுடன் பேஃபின் குடா வழியாக டேவிஸ் நீரிணையின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. [3] இது அத்திலாந்திக்கு கடலின் எல்லையோரக் கடலாக குறிப்பிடப்படுகிறது.[4][5]
லாப்ரடார் கடல் | |
---|---|
கிறீன்லாந்தின் கடற்கரைப் பகுதியான பாமியட் அருகே சூரிய மறைவிற்குப் பிறகான லாப்ரடார் கடலின் தோற்றம் | |
ஆள்கூறுகள் | 61°N 56°W |
வகை | கடல் |
வடிநில நாடுகள் | கனடா, கிறீன்லாந்து |
அதிகபட்ச நீளம் | c. 1,000 km (621 mi) |
அதிகபட்ச அகலம் | c. 900 km (559 mi) |
மேற்பரப்பளவு | 841,000 km2 (324,700 sq mi) |
சராசரி ஆழம் | 1,898 m (6,227 அடி) |
அதிகபட்ச ஆழம் | 4,316 m (14,160 அடி) |
மேற்கோள்கள் | [1][2] |
வட அமெரிக்கத் தட்டும் கிறீன்லாந்து தட்டும் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு தொடங்கிப் பிரியத் தொடங்கி, சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகர்வு நின்ற போது இந்தக் கடல் உருவாகியிருக்காலம் எனக் கூறப்படுகிறது. உலகின் மிகப் பெரிய கலங்கல் நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. அதாவது, வடமேற்கு அட்லாண்டிக் நடுப்பெருங்கடல் நீர்வழிப் பாதையானது (NAMOC), ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கடல் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியை நோக்கி அமைந்துள்ளது.
லாப்ரடோர் கடலானது வட அட்லாண்டிக் ஆழ்கடல் நீரின் முதன்மையான ஆதாரமாக உள்ளது. மிகவும் குளிர்ச்சியான, வட அட்லாண்டிக் கடலின் பெரும் ஆழத்தில் நகரும் நீர்ப்பரப்பாக உள்ள இக்கடலானது பரந்து விரிந்து, உலகப் பெருங்கடலில் அடையாளம் காணக்கூடிய நீர்ப்பரப்பாக இது திகழ்கிறது.