வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி
சரவாக் மாநிலத்தில் இயங்கிய ஒரு கம்யூனிச அரசியல் கூட்டணி / From Wikipedia, the free encyclopedia
வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி (ஆங்கிலம்: North Kalimantan Communist Party (NKCP); மலாய்: Parti Komunis Kalimantan Utara (PKKU); சீனம்: 北加里曼丹共產黨;) என்பது 1971-ஆம் ஆண்டில், மலேசியா, வடக்கு போர்னியோ (சரவாக்) மாநிலத்தில் இயங்கிய ஒரு கம்யூனிச அரசியல் கூட்டணியாகும்.[4]
விரைவான உண்மைகள் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி North Kalimantan Communist Party, சுருக்கக்குறி ...
வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி North Kalimantan Communist Party | |
---|---|
Parti Komunis Kalimantan Utara | |
சுருக்கக்குறி | NKCP |
தலைவர் | வென் மிங் சுயான் |
தொடக்கம் |
|
கலைப்பு | 17 அக்டோபர் 1990 |
இளைஞர் அமைப்பு | சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (SAYA)[2] |
துணை இராணுவப் பிரிவு | |
கொள்கை |
|
அரசியல் நிலைப்பாடு | இடது சாரி |
நிறங்கள் | Red |
மூடு
இந்தக் கட்சி, 19 செப்டம்பர் 1971-இல் நிறுவப்பட்டது. அதற்கு முன், சரவாக் மக்கள் கெரில்லா படை (Sarawak People's Guerilla Force) என்ற பெயரில் இயங்கி வந்தது. வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியின் தலைவர் வென் மிங் சியுவான் (Wen Ming Chyuan); மற்றும் இந்தக் கட்சி மக்கள் சீனக் குடியரசு நாட்டுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது.[5][2]