வூடூ
From Wikipedia, the free encyclopedia
வூடூ அல்லது எயிட்டிய வூடோ (Haitian Vodou) [1][2], (ஒலிப்பு: /ˈvoʊduː/ சில நேரங்களில் வோடுங்[3][4] அல்லது வூடோங்[1][3]) கரிபிய நாடான எயிட்டியில் தோன்றிய ஓர் கலவை[5] சமயமாகும். இது மேற்கு ஆபிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் அரவாக் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டது. 16வது நூற்றாண்டில் எயிட்டிக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகளால் இந்த சமயம் தோன்றியது; தங்கள் மரபு சார்ந்த நம்பிக்கைகளை விட முடியாமலும் அதேநேரம் தங்கள் எசமானர்களின் சமய நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டி வந்ததாலும் இந்தச் சமயம் உருவானது.[6] இந்தச் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் வூடோசோ என அழைக்கப்படுகின்றனர்.