1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1948 Summer Olympics) அலுவல்முறையாக பதினான்காம் ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the XIV Olympiad) ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்தில் இலண்டன் நகரில் நட்பெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெர்லினில் நடைபெற்ற 1936 ஒலிம்பிக்கை அடுத்து இரண்டாம் உலகப் போரினால் 12-ஆண்டுகள் தடைபட்டு மீண்டும் நடந்த முதல் ஒலிம்பிக்காக இது அமைந்திருந்தது. 1940 ஒலிம்பிக் தோக்கியோவில் நடைபெறுவதாக இருந்து பின்னர் எல்சிங்கிக்கு மாற்றப்பட்டது; 1944 ஒலிம்பிக் முதலில் இலண்டனில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. 1908க்குப் பிறகு இரண்டாம் முறையாக இலண்டன் இந்தப் போட்டிகளை நடத்தியது. மீண்டும் 2012இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி மூன்று முறை நடத்திய ஒரே நகரமாக இலண்டன் விளங்குகின்றது.
Emblem of the 1948 Summer Olympics | |
நடத்தும் நகரம் | இலண்டன், United Kingdom |
---|---|
பங்குபெறும் நாடுகள் | 59 |
வீரர்கள் | 4,104 (3,714 men, 390 women) |
நிகழ்ச்சிகள் | 136 in 17 sports (23 disciplines) |
துவக்கம் | 29 July 1948 |
நிறைவு | 14 August 1948 |
திறந்து வைத்தவர் | |
தீச்சுடர் ஏற்றியோர் | John Mark[1] |
அரங்கு | Wembley Stadium |
கோடைக்காலம் Helsinki 1952 → குளிர்காலம் ← St. Moritz 1948 Oslo 1952 → |
போருக்குப் பிந்தைய பங்கீடலாலும் பொருளியல் நிலையாலும் இந்த ஒலிம்பிக் சிக்கன ஒலிம்பிக் எனப்பட்டது. போட்டிகளுக்காக புதிய விளையாட்டரங்கள் கட்டப்படவில்லை. போட்டியாளர்கள் ஒலிம்பிக் சிற்றூருக்கு மாறாக ஏற்கெனவே இயங்கிவந்த தங்குவிடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். மிகக் கூடுதலாக 59 நாடுகளிலிருந்து 4,104 போட்டியாளர்கள், (3,714 ஆடவர், 390 பெண்கள்) 19 விளையாட்டுக்களில் கலந்து கொண்டனர். செருமனி, சப்பான் நாடுகள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது; சோவியத் ஒன்றியம் அழைக்கப்பட்ட போதும் அந்நாடு எந்த போட்டியாளரையும் அனுப்பவில்லை. ஐக்கிய அமெரிக்கா மிகுந்த பதக்கங்களையும்,84, மிகுந்த தங்கப் பதக்கங்களையும், 38, வென்றது. போட்டி நடத்திய பிரித்தானியா மூன்று தங்கப் பதக்கம் உட்பட 23 பதக்கங்களை வென்றது.