1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
1984 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சூலை 28 முதல் ஆகத்து 12 வரை நடைபெற்ற ஒலிம்பிக் ஆகும். அதிகாரபூர்வமாக இது XXIII ஒலிம்பியாட் என அழைக்கப்பட்டது. இப்போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சலஸ் நகருடன் போட்டியிட்ட தெக்ரான் ஈரானிய அரசியல் சூழலால் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு போட்டியில்லாமல் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தால் வழங்கப்பட்டது. 1932ம் ஆண்டும் லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளது. இது லாஸ் ஏஞ்சலசுக்கு இரண்டாவது முறையாகும்.
Emblem of the 1984 Summer Olympics | |
நடத்தும் நகரம் | லாஸ் ஏஞ்சலஸ், United States |
---|---|
குறிக்கோள் | Play a Part in History |
பங்குபெறும் நாடுகள் | 140 |
வீரர்கள் | 6,829 (5,263 men, 1,566 women) |
நிகழ்ச்சிகள் | 221 in 21 sports (29 disciplines) |
துவக்கம் | July 28, 1984 |
நிறைவு | August 12, 1984 |
திறந்து வைத்தவர் | |
தீச்சுடர் ஏற்றியோர் | Rafer Johnson[1] |
அரங்கு | Los Angeles Memorial Coliseum |
கோடைக்காலம்
குளிர்காலம் ← Sarajevo 1984 Calgary 1988 → |
1980ம் ஆண்டு மாசுக்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணித்ததால் சோவியத் ஒன்றியமும் பல பொதுவுடமை நாடுகளும் இப்போட்டியை புறக்கணித்தன. உருமேனியா இப்போட்டியில் பங்கு கொண்டது. வேறுபல காரணங்களால் ஈரான், லிபியா, அல்பேனியா போன்றவை இப்போட்டியைப் புறக்கணித்தன.
பாதுகாப்பு குறைபாட்டாலும், அமெரிக்க ஆதிக்க மனப்பான்மையாலும் இப்போட்டியைப் புறக்கணிக்க போவதாக சோவியத் ஒன்றியம் மே 8, 1984 அன்று கூறியது. போட்டியைப் புறக்கணித்த நாடுகள் நல்லுறவு போட்டி என்று ஒன்றை சூலை முதல் செப்தெம்பர் வரை நடத்த முற்பட்டனர். ஒலிம்பிக் நடந்த நாட்களில் நல்லுறவு போட்டியில் ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. அப்போட்டி ஏற்பாட்டாளர்கள் குறிப்பாக சோவியத் ஒன்றியம் இப்போட்டி (நல்லுறவு) ஒலிம்பிக்கிற்கு மாற்றாக நடத்தப்படவில்லை என்றும் அமெரிக்காவின் சிறந்த வீரர்களும் சோவியத் ஒன்றியத்தின் சிறந்த வீரர்களும் 1986 ம் ஆண்டு மாசுகோவில் நல்லிணக்க போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறியது.
1976ல் மொண்ட்ரியாலிலும் 1980ல் மாசுக்கோவிலும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியை நடத்தியவர்களுக்கு போட்டியினால் வருமானம் குறைவாகக் கிடைத்தது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த போட்டியில் ஏற்கனவே உள்ள அரங்குகளே பயன்படுத்தப்பட்டன. நீச்சல் போட்டிக்காக மட்டும் புதிய அரங்கம் கட்டப்பட்டது. ஆனாலும் அதற்குரிய செலவு முழுவதும் விளம்பரதாரர்களால் ஏற்கப்பட்டது. இதனால் இப்போட்டிக்கான செலவு பெரிதும் குறைவாக இருந்தது. இப்போட்டியினால் கிடைத்த லாபத்தில் சிறிது தென் கலிபோர்னியாவில் இளையோரிடையே விளையாட்டை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1984 ஒலிம்பிக் பொருளாதார அளவில் வெற்றியடைந்த போட்டியாகும்.
இப்போட்டியின் அதிகாரபூர்வ முகடியாக "சாம் ஒலிம்பிக் கழுகு" அறிவிக்கப்பட்டது.