2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2014 Winter Olympics) அல்லது 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (22nd Winter Olympics) உருசியாவின் சோச்சி நகரில் 2014 பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23 வரை நடைபெற்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அயன அயல் மண்டல நகரமொன்றில் நடப்பது இதுவே முதல்முறையாகும். சூலை 4, 2007இல் குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கூடிய 119வது பன்னாட்டு ஒலிம்பிக் குழு மன்றத்தில் இங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டது.[1] 1980இல் மாஸ்கோ நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியுள்ள உருசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
விரைவான உண்மைகள்
மூடு