இரண்டாம் இசுகோர்ப்பியோன்
வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தெற்கு எகிப்தை ஆண்ட மன்னர் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் இசுகோர்ப்பியோன் (Scorpion II), மூன்றாம் நக்காடா பண்பாட்டு காலத்தில் (கிமு 3320 - 3000) வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தெற்கு எகிப்தை ஆண்ட ஆட்சி செய்த மன்னர் ஆவார். பண்டைய எகிப்திய மொழியில் இவரை செல்க் (Selk) அல்லது வேகா (Weha) என்றும் அழைப்பர். இவர் தினீஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு மேல் எகிப்தை ஆட்சி செய்தார்.
விரைவான உண்மைகள் இரண்டாம் இசுகோர்ப்பியோன் Scorpion II, எகிப்தின் பாரோ ...
இரண்டாம் இசுகோர்ப்பியோன் Scorpion II | |
---|---|
வேகா, செல்க் | |
மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சிற்பம் | |
எகிப்தின் பாரோ | |
முன்னவர் | பார்வோன் கா |
பின்னவர் | பார்வோன் நார்மெர் |
மூடு
இரண்டாம் இசுகோர்ப்பியோன் பெயர் நவீன எகிப்தியவியலில் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவரின் பெயர் பெரும்பாலும் வட்ட வடிவில் அமைந்த ஆறு அல்லது 6 தங்க நிற இலை அல்லது பூக்களால் அறியமுடிகிறது. இந்த சின்னத்தை எகிப்தின் பண்டைய தொல்பொருட்களில் காண முடிகிறது.