கிழக்காசியா
ஆசியாவின் கிழக்குப் புவியியற் பகுதி / From Wikipedia, the free encyclopedia
கிழக்கு ஆசியா (East Asia) அல்லது வடகிழக்கு ஆசியா (Northeast Asia) என்பது ஆசியக் கண்டத்தின் கிழக்கு உள்வட்டாரம் ஆகும்; இதைப் புவிப்பரப்பியலாகவோ[3] அல்லது பண்பாட்டியலாகவோ வரையறுக்கலாம்.[4] terms.[5][6] இது புவிப்பரப்பியலாகவும் புவி அரசியல் வழியிலும், சீனப் பெருநாடு, ஆங்காங், மக்காவு, யப்பான், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா, தைவான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கும்.[7][8][9][10][11][3][12][13][14][15][16][too many citations]
கிழக்காசியா East Asia | |
---|---|
நாடுகள் | |
சார்பு நாடுகள் | |
பெருநகரங்கள் | |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,18,39,074 km2 (45,71,092 sq mi) |
மக்கள்தொகை (0)[note 2] | |
• மொத்தம் | 0 |
• தரவரிசை | 2-ஆம் இடம் (உலக அளவில்) |
• அடர்த்தி | 0.0/km2 (0.0/sq mi) |
நேர வலயம் |
|
மொழிகளும் மொழிக்குடும்பங்களும் |
|
இவ்வட்டாரம் பல பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாகும். இவற்றுள் பண்டையக் கால சீன நாகரிகம் யப்பான் நாகரிகம், கொரிய நாகரிகம், மங்கோலியப் பேரரசு ஆகியவை உள்ளடங்கும்.[17][18] கிழக்காசியா உலக நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாகும்; இதில் பண்டைய சீன நாகரிகம் உலக மாந்தரின வரலாற்றிலேயே மிகப் பழைய நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாகும். பல ஆயிரம் ஆண்டுகளாக, சீனா கிழக்காசியாவை உருமாற்றி வந்துள்ளது. இந்த வட்டாரத்தில் சீன நாகரிகம் பெருமை மிக்கதாக தன்னைச் சுற்றியமைந்த அண்டை நாடுகள்பால் பெருந்தாக்கம் செலுத்தியது.[19][20][21] வரலாற்றியலாக, கிழக்காசியச் சமூகங்கள் சீனப் பண்பாட்டுக் களத்தின் பகுதியாகவே விளங்கி வந்துள்ளன. கிழக்காசிய சொற்களும் எழுத்துகளும் முறையே செவ்வியல் சீனத்தில் இருந்தும் சீன எழுத்து வடிவத்தில் இருந்தும் உருவாகியுள்ளன. சீன நாட்காட்டி கிழக்காசியப் பண்பாட்டை உட்கொண்டுள்ளது. இதுவே மற்ற கிழக்காசிய நாட்காட்டிகள் உருவாகவும் வழிவகுத்துள்ளது. கிழக்காசியாவின் பெருஞ்சமயங்களாக கிழக்காசியப் புத்த சமயம் (பெரிதும் மகாயாணம்)[22]), கன்பூசியனியம், புதிய கன்பூசியனியம், தாவோயியம், முன்னோர் வழிபாடு, சீனா, மக்காவு, தைவான் சார்ந்த சீன நாட்டுப்புற சமயம், யப்பானிய புத்த சமயம், யப்பானியச் சிண்டோயியம், கொரியக் கிறித்தவம், கொரியச் சாமனியம் (வேலன் வெறியாட்டம் போன்றது), ஆகியவை விளங்குகின்றன. [23] சாமனியம் மங்கோலியர், பிற வடகிழக்காசியத் தொல்குடிகளாகிய மஞ்சூக்கள் ஆகியோரிடமும் அமைகிறது.[24][25]
கிழக்காசியர் ஏறத்தாழ 1.6 பில்லியன் மக்கள் அடங்குவர்; இவர்கள் ஆசிய மக்களில் 38% ஆகவும் உலக மக்களில் 22% ஆகவும் அமைகின்றனர். இப்பகுதியில் உலகின் பல பெருநகரங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், பீகிங், ஆங்காங், சியோல், சாங்காய், தைபை, தோக்கியோ ஆகியவை அடங்கும். கிழக்காசியாவின் கடற்கரை (நெய்தல்), ஆற்றுவளப் (மருதம்) பகுதிகள் உல்கின் உயர் மக்கள்தொகை அமைந்த இடங்களில் ஒன்றாகும். இருந்தாலும், மங்கோலியா, வடக்கத்தியச் சீனா ஆகிய நிலம் சிறைப்பட்ட பகுதிகளில் மிகவும் குறைவான மக்களே வாழ்கின்றனர்; மங்கோலியாவில் அனைத்து நாடுகளினும் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி அமைகிறது. இந்த வட்டாரத்தி ஒட்டுமொத்த மக்கள் அடர்த்தி 133/கிமீ2 ஆகும். இது உலகநிரல் (சராசரி) மதிப்பாகிய 45/கிமீ2 விட மும்மடங்கு ஆகும்.