மம்மி
From Wikipedia, the free encyclopedia
மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழையது 1940 இல் தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் கண்டுபிடுக்கப்பட்ட மம்மிக்கலாகும். அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.